தென் கிழக்காசியப் பிராந்திய நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் கலந்துகொள்ளும் 27ஆவது மாநாடு இன்று நேபாளத்தின் கத்மாண்டு நகரில் ஆரம்பமாகவுள்ளது. இரண்டு நாட்களுக்கு நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கடந்த வெள்ளிக்கிழமை அங்கு விஜயம் செய்த இலங்கையின் சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மாநாட்டில் விசேட உரையாற்றவுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நேபாளத்தில் நாளை ஆரம்பமாகவுள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் தென்கிழக்காசியப் பிராந்தியக் குழுவின் 62ஆவது அமர்விலும் அமைச்சர் நிமல் சிறிபால பங்கேற்கவுள்ளார். இந்த இரு நிகழ்வுகளினதும் இணை அங்குரார்ப்பண வைபவம் கத்மாண்டு நகரிலுள்ள சோல்ட்டீ க்ரவுன் ப்ளாஸா ஹோட்டலில் இன்று நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.