பிலிப் பைன்ஸ் அருகே சுப்பர் பெர்ரி- 9 என்ற பயணிகள் படகு கடலில் மூழ்கியதில் அதில் பயணம் செய்த 968 பேரில் 58 பேரைக் காணவில்லை. 10 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் 900 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60ஐத் தாண்டும் என அஞ்சப்படுகிறது.
சாண்டோஸ் பகுதியில் இருந்து இலாய்லோ நோக்கி சுப்பர் பெர்ரி பயணிகள் படகு புறப்பட்டது. பயணிகள் மற்றும்; ஊழியர்கள் உள்பட ஆயிரம் பேர் இந்தக்கப்பலில் பயணித்தனர். பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா அருகே ஷாம்போங்கா அருகே (மணிலாவில் இருந்து 860 கி. மீட்டர் தொலைவில்) கப்பல் திடீரென மூழ்க துவங்கியது.
அதிகாலை நேரம் படகு மூழ்க ஆரம்பித்தது. உடன் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து கடற்; படையினர், விமான படையினர், வர்த்தக கப்பல், மற்றும் மீனவர்கள் படகு உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
உயிருக்கு போராடியவர்கள் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டனர். 900 பேர் மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் இறந்த 10 உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. ஏனையயோர் கடலில் மூழ்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.