வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட குறைந்த அளவிலான பவன அமுக்கத்தின் விளைவாக சில தினங்களாக மன்னாரில் கடும் சூறைகாற்று வீசி வருகின்றது.
இதனால் மன்னார் மக்களின் அன்றாட வேலைகள் பாதிக்கப்பட்டுள்ளது.இதன் விளைவாக அடிக்கடி மின் தடங்கல் ஏற்பட்டு வருகின்றது. மரங்கள் சரிந்து கிடக்கின்றன. தோட்டங்களில் உள்ள வாழை, முருங்கை மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. சூரைக்காற்றுடன் மண் புழுதியும் கிளம்புவதால் மக்கள் வீதிகளில் நடமாட முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது