கடந்த 2008 ஆம் ஆண்டில் உலகிலேயே அதிக ஆயுத விற்பனை செய்த நாடாக அமெரிக்காதான் என்று அமெரிக்க நாடாளுமன்ற குழு தாக்கல் செய்த அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
” வளரும் நாடுகளுக்கான மரபு ஆயுத பரிமாற்றங்கள் ” என்ற தலைப்பின் கீழ் அமெரிக்கா கடந்த 2008 ஆம் ஆண்டு மேற்கொண்ட் ஆயுத விற்பனை குறித்து ஆய்வு செய்து, அமெரிக்க நாடாளுமன்ற குழு ஒன்று அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
அதில் மேற்கண்ட விவரம் இடம்பெற்றுள்ளதாகவும், உலகில் விற்பனையான மூன்றில் இரண்டு பங்கு ஆயுதங்களை அமெரிக்காவே விற்பனை செய்துள்ளதாகவும், ஏறக்குறைய 55.2 பில்லியன் டாலருக்கு இந்த் ஆயுத விற்பனை நடைபெற்றுள்ளதாகவும் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தியா போன்ற நாடுகளில் இதுவரை ஆயுத விற்பனை செய்து வந்த ரஷ்யாவின் மார்க்கெட்டையும் அமெரிக்கா தற்போது பிடித்து விட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.