பிரித்தா னியாவின் செனல் 4 தொலைக்காட்சி, இலங்கை இராணுவத்திற்குப் பாரிய அபகீர்த்தியை ஏற்படுத்தும் வீடியோக் காட்சிகள் தொடர்பாக ஜனாதிபதியின் விதப்புரைக்கமைய நான்கு கட்ட விசாரணைகள் நடத்தப்பட்டன என இடர் முகாமைத்துவம் மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.
இன்று தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பேசியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
“அண்மையில் நான் ஜெனீவாவுக்கு சென்றிருந்த போது, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினேன். பிரித்தானியாவின் செனல் 4 தொலைக்காட்சி ஒலிபரப்பிய வீடியோ தொடர்பில் ஒரு மணி நேரம் அவருடன் கலந்துரையாடினேன். செனல் 4 தொலைக்காட்சி தொடர்பில் அரசின் நிலைப்பாடு என்ன என அவர் என்னிடம் வினவினார்.
இது போலியாகச் சித்திரிக்கப்பட்ட வீடியோக் காட்சி என்று அரசு உறுதிபடக் கூறுவதாக நான் அவரிடம் தெரிவித்தேன். வீடியோக் காட்சிகள் குறித்த அறிக்கை நாளை மறுதினமளவில் வெளியிடப்படும். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்கீமூனிடம் அறிக்கை கையளிக்கப்படும்.
இவை போன்ற குற்றச்சாட்டுகள் எமக்கு ஒன்றும் புதிதல்ல. பல சர்வதேச ஊடகங்கள், வன்னியில் இருந்த 4 மருத்துவர்களின் அறிக்கையை வைத்துக் கொண்டு இலங்கை இராணுவத்தினருக்கு எதிராகப் பல குற்றச்சாட்டுகளை சுமத்தின. சிலியன்களை இலக்கு வைத்துத் தாக்கியதாகவும் வைத்தியசாலைகள் மீது மோட்டார் தாக்குதல் நடத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. மருத்துவர்கள் நால்வரும் விடுதலைப் புலிகளே எம்மை இவ்வாறு அறிக்கைகள் சமர்ப்பிக்குமாறு வற்புறுத்தியதாக அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தனர்.
இதே போன்று கனடாவில் உள்ள மனித உரிமைகள் அமைப்புக்கள், இவை போன்ற வீடியோக் காட்சிகளை வெளியிட்டுப் பல குற்றச்சாட்டுகளைச் சுமத்தின. இதுவும் போலியானவை என நாம் உறுதிப்படுத்தினோம். மேற்படித் தொலைக்காட்சி தொடர்பிலான விசாரணைகளை டாக்டர் சுனில் ஹே வித்தாரண ( இவர் உலகளாவிய ரீதியில் பிரசித்திபெற்ற வீடியோ பரிசோதகர் ), மொறட்டுவை பல்கலைக் கழகத்தின் தலைமை தொழில்நுட்ப விரிவுரையாளர் சத்துர டி சில்வா, சிரேஷ்ட சமிக்ஞைகள் அதிகாரி பிரசாத் சமரசிங்க, மேஜர் ஜெனரல் பி. ஏ. பண்டார போன்றோர் நடத்தினர்.
அவர்களின் அறிக்கையில், இந்த வீடியோ காட்சிகள் ‘கேம் கோடர்’ (Camcoder) மூலமாகவே ஒளிப்பதிவு செய்யப்பட்டன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கையடக்கத் தொலைபேசியில் அல்ல எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் போலியான ஒலிப்பதிவு (Audio) நவீன தொழில்நுட்பத்தின் மூலம் பதிவாக்கப்பட்டது எனவும் உறுதிப்டுத்தப்பட்டுள்ளது”
சாந்தன்
கட்டம் 1 – உடனடியாக என்ன செய்வது. வழமை போல மறுப்பு, ஸ்ரீலங்காவுக்கு ‘அப கீர்த்தி’ முயற்சி போன்ற பழைய அறிக்கைகளை வெளியே எடுத்து விடுதல்.
கட்டம் 2- எவ்வாறு இந்த வீடியோவை புலியே தயாரித்துக் கொடுத்தது, ஜீ.ரி.வியில் காட்டிய பழைய கிளிப் அது இது என அவசரப்பட்டு அறிக்கை விடலாம், பல ‘சருகுபுலிகளை’ துணைக்கழைத்து சிஞ்சிஞ்சா போடவைக்கலாம் என விசாரணை.
கட்டம் 3- யார் மூலம் இந்த வீடியோ வெளியேறி இருக்கலாம்? என விசாரணை. ஒன்றும் முடியாத போது இருக்கிற எல்லா வீடியோவுக்கும் சீல் வைப்பு.
கட்டம் 4- வீடியோவில் அதைக்காணேல்லை, இதைக்காணேல்லை என ‘தாளிப்பு’ விளையாட்டுகளை எவ்வாறு செய்யலாம் என விசாரணை!சிஸ்கோ, வின்ரீவி போன்ற கொம்பனிகளில் வேலை செய்தோரை பக்கத்தில் வைத்துக்கொண்டு அறிக்கை விடுதல்.
palli
இதில் சட்டத்தை விட சாந்தன் தொழில் நுட்ப்பத்தை நம்புகிறார் என நினைக்கிறேன்;
சாந்தன்
‘….இதில் சட்டத்தை விட சாந்தன் தொழில் நுட்ப்பத்தை நம்புகிறார் என நினைக்கிறேன்..’
ஸ்ரீலங்காவின் சட்டம் கொலை செய்வது நியாயம் என சொல்கிறதாயின் நான் குற்றவாளிதான்!
பார்த்திபன்
சாந்தன்,
சிலவேளை இலங்கை அரசு; வன்னியில் முன்பு நடந்த சட்டங்களின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கின்றதோ என்னவோ??
மாயா
சில விடயங்களில் அரசு சரியென்றும் நாம் வாதிடக் கூடாது. அது ஏகாதிபத்திய ஆட்சியை நாம் அங்கீகரிப்பதாக ஆகிவிடும். அது இலங்கை வாழ் மக்களை நிச்சயம் பாதிப்புக்குள்ளாக்கும். புலிகளின் தவறுகளை எப்படி எதிர்த்தோமோ , அதேபோல் அரசின் தவறுகளையும் நாம் எதிர்ப்பதும் சுட்டிக் காட்டுவதும் நமது கடமையாக வேண்டும். அது புலியானாலென்ன , சிங்கமானாலென்ன , பூனையானாலென்ன நமக்கு எல்லாம் ஒன்றாக வேண்டும்.
சாந்தன்
‘…சிலவேளை இலங்கை அரசு; வன்னியில் முன்பு நடந்த சட்டங்களின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கின்றதோ என்னவோ?…
அவ்வாறாயின் அதை ஒத்துக்கொள்ள வேண்டியது தானே. அதை விட்டு அரை மணித்தியாலத்துக்கு ஒரு கதை விடுவானேன்? புதுக்கதை தெரியுமா? சனல்-4 க்கு எதிராக சட்ட நடவடிக்கையாம்!
palli
மாயா தாங்கள் சொன்ன கருத்துக்கு கீழ் நாம் அனைவரும் வரும்போது எம்மவர்க்கு விடுதலை கிடைக்குதோ இல்லையோ ஆனால் கண்டிப்பாக விமர்சனம் கிடைக்கும், காரணம் அப்போது தமிழ்மக்களை (எம்மவர்) ஏய்ப்பவர்கள் நாடு கடந்த அகதி விண்ணப்பம் தேடுவார்கள் அதுவே அந்த மக்களுக்கு விடிவு உன்மையான விடிவு;