மாத்தறை யிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற றுகுணுகுமாரி கடுகதி ரயில் அஹங்கமையில் நேற்றுக் காலை 6.00 மணியளவில் தடம்புரண்டது. இதனால் கரையோர ரயில்கள் அஹங்கமை வரை மட்டுப்படுத்தப்பட்டி ருந்ததாகவும், நண்பகலுடன் சேவைகள் வழமைக்குத் திரும்பியதாகவும் ரயில்வே திணைக்கள முகாமையாளர் விஜய சமரசிங்க தெரிவித்தார்.
ரயில் தடம்புரண்டதையடுத்து பயணிகளை காலி வரை பஸ் வண்டியில் அழைத்துச் சென்று காலியிலிருந்து வேறொரு ரயில் மூலம் கொழும்புக்கு அழைத்துச் செல்ல ஒழுங்குகள் மேற்கொண்ட தாகவும் ரயில்வே திணைக்கள முகாமையாளர் தெரிவித்தார். ரயில் பாதை சீரமைப்பு பணிகள் நேற்று நண்பகலுடன் பூர்த்தியானதும் ரயில் சேவையும் வழமைக்கு திரும்பியுள்ளது.