இலங் கையில் நாள்தோறும் 12 பேர் தற்கொலை செய்து கொள்வதாக ஸ்ரீலங்கா சுமித்ரயோ என்ற அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் நாள் தோறும் சுமார் 120 பேர் தற்கொலை முயற்சிகளை மேற்கொள்வதாகவும் பல்வேறு மன உலைச்சல்களினால் பாதிக்கப்படுவதாகவும் அது தெரிவிக்கின்றது.
கடந்த காலங்களைவிட தற்போது, தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ள போதிலும் பெண்கள் அதிகமாக தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுவதாகக் குறிப்பிடப்படுகிறது. எவ்வாறெனினும் தற்கொலை செய்து கொள்வதில் அதிகமாக ஆண்களே முன்னிற்பதாகவும் அந்த அமைப்பு மேலும் குறிப்பிடுகிறது.