இலங்கை அரசுடன் இணைந்து வடமாகாணத்தின் புனர்நிர்மாணப் பணிகளுக்கு உதவி மற்றும் எனைய ஒத்துழைப்புக்களை வழங்க ஜப்பானின் ஜெயிக்கா நிறுவனம் முன்வந்துள்ளது.
ஜெயிக்கா நிறுவனத்தின் திட்டம்; மற்றும் பொருளாதார உட்கட்டமைப்பு திணைக்கள பிரதிப் பணிப்பாளர் நாயகம் மசாமி புவா தலைமையிலான குழுவினர் மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிசாத் பதியுதீனை,அமைச்சின அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தினர்.