இலங்கை இராணுவத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் நோக்கில் பிரித்தானியாவின் செனல் 4 ஊடக நிறுவனம் அண்மையில் வெளியிட்ட வீடியோக் காட்சி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் நோக்கில் உயரதிகாரி ஒருவர் லண்டனுக்கு விஜயம் செய்யவுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் சக்திகள் தொடர்பில் பிரித்தானியா அரசாங்கத்திற்கு குறித்த அதிகாரி தெளிவுபடுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் போலிப் பிரச்சாரங்களை தடுப்பதற்கு சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளப்பட உள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹலுகல்ல தெரிவித்துள்ளார்.