தெனியாய பிரதேசத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்ட லங்கா வார இதழின் ஊடகவியலாளர்கள் மூவரும் நெற்று பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். தெனியாய பகுதியில் தனியார் தோட்டம் ஒன்றிற்குள் அனுமதியின்றி பிரவேசித்து அங்கு அமைக்கப்பட்டு வரும் கட்டடம் ஒன்றைப் படம் பிடித்த குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
பொலிஸார் இவர்கள் மூவரையும் நேற்று மொறவக்கை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அதன்போது நீதவான் மூவரையும் தலா 3000 ரூபா ரொக்கப் பிணையிலும் 50000 ஆயிரம் ரூபா சரீர பிணையிலும் விடுதலை செய்தார். இவர்கள் மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் நவம்பர் மாதம் 04 ஆம் திகதி நடைபெறவுள்ளது