அமெரிக்க அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் மகள்

manmohan_daughter.jpgஆப்கா னிஸ்தான் மற்றும் ஈராக்கில் பிடிபட்ட சிறை கைதிகளை கொடுமைப்படுத்தியது தொடர்பான ரகசிய ஆவணங்களை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் மகள் அம்ரீத் சிங், அமெரிக்க கோர்ட்டில் வாதாடி பெற்றுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் கைது செய்யப்பட்ட கைதிகள் குவான்தனாமோ சிறையிலும்,  ஈராக்கில் கைது செய்யப்பட்ட கைதிகள் அபு கிரெய்ப் சிறையிலும் அடைக்கப்பட்டு அமெரிக்க ராணுவத்தினரால் பல்வேறு சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டனர்.  இது தொடர்பாக அமெரிக்க புலனாய்வு நிறுவனங்களான எப்.பி.ஐ., சி.ஐ.ஏ, போன்றவை பதிவு செய்த ஆவணங்கள் மற்றும் வீடியோ டேப்புகளை ஒப்படைக்கும் படி அமெரிக்க மனித உரிமை இயக்கம் நீண்ட நாட்களாக (ஏ.சி.எல்.யூ.,) கோரி வந்தது.

கியூபா நாட்டுக்கு அருகே உள்ள குவான்தனாமோ சிறை மற்றும் அபு கிரெய்ப் சிறையில் கைதிகள் கொடுமைப்படுத்தப்பட்ட அனைத்து விவரங்களையும் அளிக்கும்படி அமெரிக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி, ஏ.சி.எல்.யூ., இயக்கத்தில் உள்ள அமெரிக்க வக்கீலான மன்மோகன் சிங்கின் மகள் அம்ரீத் சிங்,  கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

சிறை கைதிகளுக்கு நேர்ந்த கொடுமை,  காவலில் இறந்த கைதிகளின் பிரேத பரிசோதனை அறிக்கை அனைத்தையும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அளிக்க வேண்டும்,  என ஏ.சி.எல்.யூ., நீண்ட நாட்களாக கோரி வந்தது.

இந்த அமைப்பின் சார்பில் அம்ரீத் சிங்கும்,  கனடா நாட்டைச் சேர்ந்த ஜமீல் ஜாபரும் கோர்ட்டில் வாதாடி,  ஒரு லட்சத்து 30 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ரகசிய ஆவணங்களை பெற்றுள்ளனர். இந்த ஆவணங்களை அரசிடமிருந்து போராடி பெறுவதற்கு ஒன்பது கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.  இந்த தொகையை அரசிடமிருந்து பெறவும் இந்த அமைப்பு திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையே,  இரண்டு கைதிகளை கொடுமைப்படுத்தியது தொடர்பான வீடியோ டேப்புகளை எரித்து விட்டதாக சி.ஐ.ஏ.,  தெரிவித்துள்ளது. இது கோர்ட் அவமதிப்பு செயலாகும் என கூறும் அம்ரீத் சிங்,  இன்னும் வெளியிடப்படாத ஆவணங்களையும் ஒப்படைக்கும் படி கூறி வாதாடி வருகிறார். அமெரிக்கரை திருமணம் செய்து கொண்டுள்ள அம்ரீத் சிங்(40) யேல் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *