சட்ட விரோதமான முறையில் பிரான்ஸுக்குச் செல்ல முற்பட்ட ஆறு இலங்கைத் தமிழர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். போலி கடவுச் சீட்டு மற்றும் போலி வீசாக்களைப் பயன்படுத்தி குறித்த இலங்கைத் தமிழர்கள் பிரான்ஸ் செல்ல முற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஹைதராபாத் விமான நிலையத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இலங்கையிலிருந்து தமிழகம் சென்று, போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து இவர்கள் பிரான்ஸ் செல்ல வீசா பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.