திரு வண்ணாமலையில் நடிகை ஸ்னேகா செருப்பு அணிந்து கிரிவலம் போனதை கண்டித்து நாமக்கல்லில் இந்து மக்கள் கட்சியினர் ஸ்னேகாவின் கொடும்பாவியை எரித்தனர்.
சமீபத்தில் திருவண்ணாமலை கோவிலுக்கு கிரிவலம் சென்ற இவர் காலில் செருப்பு அணிந்து சென்றார். இதையடுத்து இந்து மத அமைப்பினர் அவருக்கு செருப்புகளை பார்சல் அனுப்பி தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். இதை தொடர்ந்து இந்து மக்கள் கட்சி போராட்டம் நடத்தும் என கூறப்பட்டது. ஆனால், ஸ்னேகா தனக்கு காலில் அறுவை சிகிச்சை செய்திருப்பதால். வெறும் காலுடன் நடக்க முடியாது. அதனால் துணி செருப்பு போட்டு நடந்தேன் என விளக்கம் கொடுத்தார். இதை அடுத்து அந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
ஆனால், இந்த விளக்கம் இந்து மக்கள் கட்சியின் அனுமன் சேனா பிரிவினரை சமாதானப்படுத்தவில்லை. அவர்கள் நாமக்கல்லில் மோகனூர் ரோட்டில் உள்ள உதவி கலெக்டர் அலுவலகம் முன் ஸ்னேகாவின் கொடும்பாவியை எரித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்ட கூட்டத்தினர் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் லேசான பதட்டம் ஏற்பட்டது.