ராசியில் லாதவர் என்ற பலத்த எதிர்ப்புக்கிடையே காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளார் நடிகை ரோஜா. மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டியைச் சந்தித்து, செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
தெலுங்கு தேசம் கட்சியின் மகளிர் அணித் தலைவியாக இருந்த ரோஜா, சித்தூர் மாவட்டம், நகரி, சந்திரகிரி தொகுதிகளில் இரண்டுமுறை போட்டியிட்டுத் தோற்றார். சொந்தக் கட்சியினரே தன்னைத் தோற்கடித்து விட்டதாகக் குற்றம் சாட்டிய அவர் தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைய திட்டமிட்டரா.
ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி, ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைவதற்கு சில தினங்களுக்கு முன், அவரைச் சந்தித்து, காங்கிரசில் தன்னைச் சேர்த்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தார். அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்திருந்தார். ஆனால், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
இந்நிலையில், ராசியில்லாத அவரை கட்சியில் சேர்த்துக் கொள்ளக் கூடாது என ஆந்திர காங்கிரசார் கோரிக்கை விடுத்திருந்தனர். இதற்குமேல் சும்மா இருந்தால், ‘ஜோலியை முடித்துவிடுவார்கள்’ என பயந்த ரோஜா, நேற்று ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டியைச் சந்தித்தார். காங்கிரஸ் கட்சியில் முறைப்படி சேர்ந்தார்.
பின்னர் நிருபர்களிடம் பேசுகையில், “தெலுங்கு தேச கட்சியிலிருந்து நான் விலகுவதாக, அதன் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு கடிதம் அனுப்பி விட்டேன். 10 ஆண்டுகளாக எனக்கு ஆதரவு அளித்த அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனி காங்கிரஸ் கட்சிதான் எனக்கு எல்லாமும். அந்தக் கட்சிக்காக உழைப்பேன்!” என்றார்.
senthil
காங்கிரசில் சேர்ந்ததால் விஜயின் படத்தை புறக்கணிப்போம்!
இனி றோஜா காங்கிரஸில் சேர்ந்ததால் தமிழ் உணர்வாளர் என சொல்லப்படும் ஆர்.கே.செல்வமணி இயக்கும் படத்தையும் அவரது உணர்ச்சிபூர்வ பேச்சையும் புறக்கணிப்போம்! இந்த டயலக் எப்படி?
chandran.raja
பணம் பண்ணுவதாக இருந்தால் சினிமா அரசியல் இதிலை ஒண்ணிலை கொடிகட்டிப் பறக்கணும். பருவத்திற்கேற்ற மாதிரி தொழிலை மாத்திக்கொள்ளும் போது ரோஜா புத்திசாலிப்பெண்னாகத் தான் இருக்கவேணும். ஜமாச்சுடுங்க!!!!
பார்த்திபன்
அம்மணி தெலுங்குதேச முதல்வரைச் சந்தித்து பூக்கொத்து கொடுத்து வாழ்த்துத் தெரிவித்ததற்கே அவர் அமரத்துவம் அடைந்து விட்டார். இப்போ அம்மணி காங்கிரசில் சேர்ந்து விட்டார். எனி தெலுங்கு தேசக் காங்கிரசின் நிலை??