பெற் றோரைப் பிரிந்த நிலையில் திருகோணமலை மாவட்டம் புல்மோட்டையைச் சேர்ந்த சகோதரிகளான இரண்டு குழந்தைகளை கெப்பிட்டிகொல்லாவ நீதிமன்றம் வவுனியா கோவில்குளம் சிவன்கோவில் அருளகம் சிறுவர் இல்லத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.
தயாபரன் புகழரசி என்ற 4 வயது சிறுமியும், தயாபரன் சாகலரசி என்ற 2 வயது குழந்தையுமே இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா கோவில்குளம் சிவன்கோவில் அறங்காவலர் அவையின் செயலாளர் ஆறுமுகம் நவரட்ணராஜா தெரிவித்துள்ளார்.
தமது சிறுவர் இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்ற இந்தக் குழந்தைகளின் பெற்றோர் அல்லது இரத்த உறவினர்கள் இருந்தால் ஆலய நிர்வாகத்துடன் தொடர்பு கொள்ளுமாறு சிவன்கோவில் அறங்காவலர் அவையின் செயலாளர் கோரியுள்ளார்.
புல்மோட்டை இடைத்தங்கல் முகாமில் தங்கியிருந்த இவர்களை இனங்கண்ட சிறுவர் பராமரிப்பு அதிகாரிகள், இவர்கள் தொடர்பாக கெப்பிட்டிகொல்லாவ நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர். இதையடுத்தே நீதிமன்றம் இவர்கள் இருவரையும் வவுனியா கோவில்குளம் அருளகம் சிறுவர் இல்லத்தி்ற்கு அனுப்பி வைத்துள்ளது