சீனாவில் ஹனான் மாநிலத்தில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் காஸ் வெடிப்பு ஏற்பட்டதில் 35 தொழிலாளிகள் பலியானார்கள். 44 பேரைக் காணவில்லை. காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை. இதுபற்றி அதிகாரிகள் விசாரித்து வருவதாகப் பீக்கிங் செய்திகள் தெரிவிக்கின்றன.
விபத்து ஏற்பட்டபோது அங்கு வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்களில் 14 பேர் மட்டும் காயமின்றி உயிர் தப்பியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்பு விதிமுறைகள் சரிவர கடைப்பிடிக்கப்படாததால், சீனாவில் உள்ள நிலக்கரி சுரங்கங்களில் அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன என்றும் கடந்த ஆண்டு மட்டும் நிலக்கரி சுரங்கங்களில் ஏற்பட்ட விபத்துக்களில் 3 ஆயிரம் பேர் பலியானார்கள் என்றும் கூறப்படுகின்றது.