அமெரிக்க ஓபன் டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் தொடரின் ஆடவர் இரட்டையர் காலிறுதி ஆட்டங்களில் லியாண்டர் பயஸ்-லூயி இணையும், மகேஷ் பூபதி-மார்க் நோல்ஸ் இணையும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினர்.
4ஆம் தரவரிசையில் உள்ள பயஸ்-லூயி இணை, 7ஆம் தரவரிசையில் உள்ள பலமான தென் ஆப்பிரிக்க-பெல்ஜியம் இணையான வெஸ்லி மூடி, டிக் நார்மன் இணையை 6- 3, 5- 7, 6- 4 என்ற செட் கணக்கில் அபாரமாக வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினர்.
பயஸ்-லூயி இணை 7 டபுள் ஃபால்ட்களையும், 20 முறை கிரவுண்ட் ஷாட்களில் தவறையும் செய்தனர். இருப்பினும் வெற்றி பெற்றதற்கு காரணம் முதல் சர்வில் வெற்றி பெற்றது அதிகம். மேலும் தென் ஆப்பிரிக்க-பெல்ஜியம் இணையின தவறுகளை குறைவாக செய்தாலும் அந்த தவறுகள் முக்கியக் கட்டத்தில் நிகழ்ந்ததால் பயஸ்-லூயி இணை வெற்றி பெற்றது.
மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் 3ஆம் தர நிலையில் உள்ள மகேஷ் பூபதி- மார்க் நோல்ஸ் இணை, தர நிலையில் இல்லாத குரேஷிய-பிரான்ஸ் இணையான லுபிசிச்-லோத்ரா இணையை 6- 4, 4- 6, 7- 6 என்ற செட்களில் சற்றே தட்டுத் தடுமாறி வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினர்.