தென் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் ஐ. ம. சு. முன்னணி வேட்பாளர்கள் சிலர் மோதலில் ஈடுபட்டது தொடர்பாக ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் ஒழுக்காற்று விசாரணைகள் நடத்தப்பட உள்ளதாக சுதந்திரக் கட்சி பொருளாளரும் போக்குவரத்து அமைச்சருமான டலஸ் அலஹப்பெரும தெரிவித்தார்.
மகாவலி நிலையத்தில் நேற்று (9) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது. ஐ. தே. க. அடங்கலான எதிர்க் கட்சியில் இருந்து எமக்கு போட்டி இல்லாததால் ஐ. ம. சு. முன்னணி வேட்பாளர்கள் தமக்கிடையே மோதிக் கொள்கின்றனர்.
ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் இது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஐ. ம. சு. மு. செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதோடு சில வேட்பாளர்களை அழை த்து உரிய அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளார். மோதல்க ளுடன் தொடர்புடைய வேட் பாளர்களுக்கு எதிரான ஒழு க்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.
இத்தகைய மோதல்கள் மூலம் குறித்த வேட்பாளர்கள் தமக்குத் தாமே பாதிப்பை ஏற்படுத்துக் கொள்கின்றனர் என்றார்.