ஐந்து இலட்சம் ரூபாய் கள்ள நோட்டிக்களுடன் பெண் ஒருவரை கெக்கிராவ பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்ணின் வீட்டிலிருந்து கள்ள நோட்டு அச்சிடுவதற்கு பயன்படுத்தப்பட்ட பல்வேறு உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக்க தெரிவித்தார்.
இந்தப் பெண் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் கள்ள நோட்டுக்களை அச்சிடும் செயற்பா டுகளுக்கு உதவியாக இருந்த மேலும் இரு பெண்களையும் பொலிஸார் கைது செய்து ள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது:-
கெக்கிராவ நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றில் தேனீர் அருந்தச் சென்ற பெண் ஒருவர் 2000/= ரூபாயை கொடுத்துள்ளார். அந்த நோட்டு தொடர்பாக ஹோட்டல் உரிமை யாளருக்கு சந்தேகம் எழுந்ததையடுத்து அதனை சோதனையிட்டுள்ள அதே சமயம் குறித்த பெண்ணையும் மடக்கிப் பிடித்து கெக்கிராவ பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். அந்தப் பெண்ணை கைது செய்த பொலிஸார் அவரிடம் மேலதிக விசாரணைகளை நடத்தியுள்ளனர். தனது வீட்டில் மேலும் கள்ள நோட்டுக்கள் மறைத்து வைத்திருப்பதாக அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பெண்ணின் வாக்குமூலத்தையடுத்து கெக்கிராவ, மலகடவல என்ற கிராமத்திலுள்ள அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்ற பொலிஸார் போலியாக அச்சிடப்பட்ட (2000) இரண்டாயிரம் ரூபாய் கள்ள நோட்டுக்கள் 227யும் (இந்த போலி நோட்டுக்களின் பெறுமதி 4 இலட்சத்து 54 ஆயிரம்) ஆயிரம் (1000/=) ரூபாய் கள்ள நோட்டுக்கள் 56 யும் (இந்த போலி நோட்டுக்களின் பெறுமதி 56 ஆயிரம்) மீட்டெடுத் துள்ளதுடன் கள்ளநோட்டு அச்சிட பயன்படுத்தப்பட்ட மை போத்தல்கள்–10, சிலின்டர்-6, வெள்ள நிறத்தாள்கள் மற்றும் உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளனர் என்றார்.
இந்தப் பெண் வழங்கிய மற்றுமொரு தகவலின் அடிப்படையில் இதற்கு ஒத்துழைப்பு வழங்கி வந்த மேலும் இரு பெண்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். இதேவேளை, போலி நோட்டுக்களை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்பட்டு வந்த கணனி மற்றும் ஏனை உபகரணங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் இடம் தொடர்பான தகவல்களை பொலிஸார் திரட்டி வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.