தோட்டத் தொழிலாளர்க ளின் சம்பள உயர்வு தொடர்பாக தொழிற்சங்கங்க ளும் முதலாளிமார் சம்மேளனமும் பேச்சுவார்த்தை யில் ஈடுபட்டுள்ளன. அதில் தீர்வுகிட்டாவிட்டால் அரசாங்கம் தலையிட்டு உரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்குமென பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் டி. எம். ஜயரத்ன பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தோட்டத் தொழிலாளர்களின் இப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தொழிற்சங்கங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இப் பிரச்சினையிலிருந்து அரசாங்கம் ஒரு போதும் நழுவிவிடவில்லை.
தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் தோட்டக் கம்பனிகள் ஆகிய இரு தரப்பதையும் பாதுகாக்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் இத்துறை வீழ்ச்சியடைந்துவிடும் என்பதை உணர்ந்தே அரசாங்கம் செயற்படுகின்றதெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று ஐக்கிய தேசியக் கட்சியும் ஜே. வி. பி.யும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக எழுப்பிய பிரச்சினைகளுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையில் அரசாங்கம் தலையிட்டு தீர்வொன்றைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமெனக் கோரி பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சியின் பிரதம கொறடா ஜோசப்மைக்கல் பெரேரா எம்.பி. விசேட கவனயீர்ப்புப் பிரேரணையொன்றை முன்வைத்து உரையாற்றினார்.
இதனையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பிரதியமைச்சர் வீ. புத்திரசிகாமணி, மனோ கணேசன் எம்.பி., அமைச்சர் மேர்வின் சில்வா ஆகியோரும் கருத்துக்களை முன்வைத்தனர்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் டி. எம். ஜயரத்ன மேலும் தெரிவிக்கையில்; தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வு காண நீண்டகாலமாக பேச்சுவார்த் தைக்ள நடத்தப்பட்டு வருகிறது. தொழிற்ச ங்கக் கூட்டமைப்புக்கும் முதலாளிமார் சம் மேளனத்துக்குமிடையிலான பேச்சுவார்த்தை இன்னும் முடிவடையவில்லை. இதற்கி டையில் நாம் இது பற்றி அழுத்தம் கொடு ப்பது முறையல்ல.
இப் பேச்சுவார்த்தை நிறைவில் தீர்வு எட்டப்படாதபட்சத்தில் அரசாங்கம் இதில் தலையிட்டு தோட்டத் தொழிலாளர்களுக் குத் தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்க அர சாங்கம் தயாராகவுள்ளது.
எனினும் இதனை அரசியலாக்க வேண்டாம் இது ஒரு தேசிய வருமானம் சம்பந்தமான பிரச்சினை என் பதை சகலரும் உணர்ந்து செயற்படுவது அவசியம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இங்கு உரையாற்றிய பிரதியமைச்சர் வீ. புத்திரசிகாமணி கூறியதாவது:
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையை வென்றெடுப்பதில் தொழிற் சங்கங்களுக்குள்ள உரிமையை வழங்குவது அவசியம். கூட்டுக்கமிட்டி பேச்சுவார்த்தை அல்லது சம்பள நிர்ணயசபை இரண்டின் மூலம்தான் இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும் என்றார்.
அரசு தலையிட வேண்டுமென நாம் கேட்க வில்லை. சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுப்பதில் தொழிற்சங்கங்களுக்கு உள்ள உரிமை கொடுக்கப்படவேண்டுமெனவும் பிரதியமைச்சர் கூறினார்.