நீண்ட கால இடைவெளிக்கு பின்பு தரை வழி ஊடாக யாழ்ப்பாணத்திற்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் லொறிகள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
நேற்று புதன்கிழமை இவை அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அத்துடன், விற்பனைக்கான முச்சக்கரவண்டிகளும் லொறிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
யுத்தம் முடிவடைந்து நிலைமை வழமைக்கு வந்து கொண்டு இருப்பதினால் அனைத்து பொருட்களையும் கொழும்பு விலையில் யாழ்ப்பாணத்தில் பெற்றுக்கொள்ளக்கூடிய நிலைக்கு விற்பனை செய்ய வசதி வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளன. தினமும் ஏ-9 வீதி வழியாக பொருட்களை ஏற்றிச் செல் லும் லொறிகள் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் புறப்பட்டு வருகின்றன.
அதேநேரம் வவுனியாவிற்கும் யாழ்ப்பாணத்திற்குமிடை யிலான பயணிகள் இபோச பஸ் சேவை தினமும் 10 முதல் 15 வரையில் இரு வழி பயணத்தினை மேற்கொள்கின் றன. யாழ்ப்பாணத்தில் உற்பத்தியாகும் திராட்சைப்பழங் கள் மற்றும் வாழைப்பழங்கள் விற்பனைக்கு வவுனியா கொண்டுவரப்பட்டுள்ளன.