தோட்ட தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு ரூபா 500 சம்பள உயர்வை வலியுறுத்தி முதலாளிமார் சம்மேளனத்திற்கும் தொழிற்சங் கங்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்று மாலை 4.30 மணியளவில் கொழும்பில் நடைபெறவுள்ளது.
முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதி செயலாளர் நாயகம் கனிஷ்ட வீரசிங்கவினால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமானுக்கும் ஏனைய கூட்டு ஒப்பந் தத்தை சார்ந்த தொழிற்சங்கங்களுக்கும் விடுத்துள்ள அழை ப்பையடுத்தே மீண்டும் இச்சந்திப்பு ஏற்பாடாகியுள்ளது.
இச் சந்திப்பில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கம், பெருந் தோட்ட தொழிற்சங்க கூட்டு கமிட்டி ஆகிய தொழிற் சங்கங்களின் பிரதிநிதிகள் முறையே பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமான், பிரதி அமைச்சர்களான முத்து சிவலிங்கம், ஜெகதீஸ்வரன், மற்றும் உப தலைவர் ஹரிச் சந்திரசேகர், தேசிய அமைப்பாளர் யோகராஜன், வேலா யுதம், எஸ். ராமநாதன் ஆகியோர் முதலாளிமார் சம்மேள னத்துடன் தோட்ட தொழிலாளரின் சம்பளத்தை அதிகரிப் பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்கள்.
இதேவேளை, தோட்ட தொழிற்சங்கங்களின் கூட்டு கமிட்டிகளுக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இடையே பல தடவைகள் முன்னெடுக்கப்பட்ட பேச்சு வார்த்தை இழுபறியில் முடிவடையவே தோட்ட தொழி லாளர்களின் ஒத்துழையாமை போராட்டம் தொடர்ந்து வருகிறது-
இந்நிலையில் முதலாளிமார் சம்மேளனம் பேச்சுக்கு அழைத்துள்ளது.