வாகனங் களை கொள்ளை யிட்டுச் சென்று அதன் உதிரிப்பாகங்களை விற்பனை செய்துவந்த இருவரை வவுனியா, இறம்பைக்குளம் பிரதேசத்தில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர்கள் கொள்ளையிட்டு வைத்திருந்த முச்சக்கர வண்டி ஒன்றையும் மோட்டார் சைக்கிள் நான்கையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக்க தெரிவித்தார்.
வவுனியா விஷேட பொலிஸ் பிரிவுக்குக் கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றை அடுத்து இறம்பைக்குளம் பிரதேசத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்த அதேசமயம் அவர்களிடமிருந்து வாகனங்களையும் மீட்டெடுத்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
சந்தேக நபர்கள் இருவர் மேற்கொண்ட கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாகவும், வாகன உரிமையாளர்கள் தொடர்பாகவும் மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.