தெற்கில் தேர்தல் நடைபெறுகிறபோதும் குருணாகலையில் அகிலா விராஜ் காரியவசத்தை காப்பாற்றும் போட்டியிலே ஐ.தே.க. தலைவர் இறங்கியுள்ளார். ஐந்து சதம் கூட பெறுமதியில்லாத மங்கள சமர வீரவை இணைத்துக் கொண்டதால் ஐ.தே.க. தலைவருக்கு பெரும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.
தெற்குத் தேர்தலில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஐ.தே.க. வுக்கு இரு ஆசனங்கள் வீதம்தான் கிடைக்கும் ஜே.வி.பி.க்கு முழு மாகாணத்தில் இருந்தும் ஒரு ஆசனம் கிடைப்பது கூட கஷ்டமான காரியமாகும்.மகாவலி நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ராஜித மேலும் கூறியதாவது
இது வரை நடைபெற்ற மாகாண சபைத் தேர்தல் முடிவுகளின்படி ஐ.தே.க. வின் வாக்குகள் 19 இலட்சத்தினால் குறைந்துள்ளன. இந்தத்தொகை தென் மாகாண தேர்தலின் பின்னர் 23 இலட்சமாக அதிகரிக்கும். ஐ.தே.க. வில் இருந்த பெரும்பாலான மக்கள் இன்று ஐ.ம.சு.மு. உடனே கைகோர்த்துள்ளனர். அடுத்து நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு ஐ.தே.க. பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த முயன்று வருகிறது. ஆனால் எவரையும் பிடிக்க முடியாது ஐ.தே.க. திண்டாடுகிறது.