சிம்பாப்வே மீது விதிக்கப்பட்டுள்ள அனைத் துத் தடைகளையும் நீக்குமாறு தென்னாபிரிக்க நாடுகளின் ஒன்றியம் ஐ. நா. வைக் கோரியுள்ளது. கொங்கோவின் தலைநகர் கின்ஸாஷாவில் நடைபெற்ற தென்னாபிரிக்க நாடுகள் ஒன்றியத் தின் மாநாட்டில் இந்தக் கோரிக்கை விடுக்கப் பட்டது.
கொங்கோ இந்த அமைப்புக்குத் தலைமை தாங்குகின்றது. சிம்பாப்வேயில் எதிர்க்கட்சி க்கும் ஆளும் கட்சிக்குமிடையே அதிகார இழுபறிகள் ஏற்பட்டதால் பாரிய மோதல்கள் வெடித்தன.
இம் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும்படி வேண்டிய ஐ. நா. அமைதி வரும் வரை சிம்பாப்வே மீது பல பொரு ளாதாரத் தடைகளை விதித்தது. இதையடுத்து ஆபிரிக்க நாடுகள் ஒன்றியம் சிம்பாப்வே உள்நாட்டு அரசியல் மோதல்களைத் தீர்த்து வைக்க பல முயற்சிகளைச் செய்தது.
ஜனாதிபதி ரொபேர்ட் முகாபே எதிர்க்கட்சித் தலைவர் ஸ்வான்கிரே ஆகியோரை ஓர் இணக்கப்பாட்டுக்கு கொண்டு வந்தது. ஸ்வான் கிரே பிரதமராகவும், ரொபேர்ட் முகாபே ஜனாதிபதியாகவும் நியமிக்கப்பட்டனர். இதன் பின்னர் சிம்பாப்வேயில் பூரண அமைதி நிலவுகின்றது.
எனவே சிம்பாப்வே மீதான தடைகள் உடன் நிறுத்தப்பட வேண்டுமென தென்னாபிரிக்க நாடுகள் ஒன்றியம் ஐ. நா. விடம் கோரிக்கை விடுத்துள்ளது. அதிகாரப் பகிர்வை முழுமையாக நடைமுறைப் படுத்துமாறு பிரதமர் ஸ்வான்கிரே விடுத்த கோரிக்கையை மாநாடு நிராகரித்தது.
ஏற்கனவே பகிரப்பட்டதுபோல் ஜனாதிபதி ரொபேர்ட் முகாபே குறித்த சில விடயங்களில் விசேட அதிகாரங்களை வைத்திருக்க வேண்டுமென மாநாடு தீர்மானித்தது.எதிர்க்கட்சித் தலைவரும் பிரதமருமான ஸ்வான்கிரேயின் கோரிக்கை மீண்டும் சிம்பாப்வேயில் உள்ளூர் மோதல்களை உருவாக்கும் என மாநாட்டில் கருதப்பட்டதால் அவரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.