இலங் கையில் நடைபெறும் முக்கோண கிரிக்கட் போட்டிகளில் பங்குபற்றுவதற்காக, இந்திய கிரிக்கட் இலங்கை செல்வதற்கு தடைவிதிக்க வேண்டும் எனக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறுவதாக கூறி, இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதற்கு 512 சட்டத்தரணிகள் ஆதரவு கையொப்பங்களை இட்டிருந்தனர்.
இந்தநிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இடைக்கால தடையை விதிக்க சென்னை மேல் நீதிமன்றம் மறுத்துள்ளது. இந்த மனுவின் பிரதிவாதியாக குறிப்பிட்ப்பட்டிருந்த இந்திய கிரிக்கட் சபை, நேற்று தமது விளக்கத்தை நீதிமன்றத்தில் அளித்திருந்தது.
அதில் தமது சபைக்கு இந்திய அரசாங்கம் நிதி ஒதுக்கீடுகளை செய்வதில்லை என்றும் தமது சபையை அரசாங்கம் அமைக்கவில்லை என்றும் அதில் தெரிவித்திருந்தது. எனவே இந்த மனுத்தாக்கல் தொடர்பில் தமக்கு பதிலளிக்கமுடியாது என்றும் இந்திய கிரிக்கட் சபை குறிப்பிட்டிருந்தது.
இந்தநிலையில் நீதிபதிகள் குழு இடைக்கால தடையுத்தரவை விதிக்க மறுத்துள்ளது