பாப் உலகில் முடிசுடா மன்னனாக திகழ்ந்த மறைந்த மைக்கல் ஜக்சனின் வெள்ளை நிற கையுறை, அவுஸ்திரேலியாவின் மெல் போர்ன் நகரில் அதிக விலைக்கு ஏலம் விடப்பட்டது. அவரது அவுஸ்திரேலிய ரசிகர் ஒருவரால் 10 ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்ட இந்த உறை விலையுயர்ந்த கற்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டதாகும். இது ஏலத்தில் விடப்பட்ட போது போட்டியிட்ட ஐந்து போட்டியாளர்களை தோற்கடித்து வார்விக் ஸ்டோன் என்பவர் 57 ஆயிரத்து 600 அவுஸ்திரேலியன் டொலருக்கு வாங்கினார். இந்த “கையுறை’ ஏற்கனவே 30 ஆயிரம் டாலர் மதிப்பிடப்பட்டு இருந்தது.
எனினும் இரு மடங்கு விலையில் ஏலம் போய் உள்ளது. ஜக்சனின் மறைவுக்கு பின் ஏலத்தில் விடப்பட்ட அவரது முதல் பொருள் இந்த கையுறையாகும்;.