பிரபாகரனின் மரண சான்றிதழ் இன்னமும் இந்தியாவுக்கு வழங்கப்படவில்லை : இந்து நாளிதழ்

100909the-hindu.jpgதமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரண சான்றிதழை இன்னும் இந்தியாவுக்கு இலங்கை அரசாங்கம் வழங்கவில்லை என இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள இலங்கை அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் சட்டவிளக்கங்கள் இடம்பெற்று கொண்டிருப்பதால் இன்னும் அது வழங்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளதாக அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்படுள்ளது.

அதேவேளை, முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் கொலை தொடர்பான வழக்கிலிருந்து முதலாம் இரண்டாம் பிரதிவாதிகளான பிரபாகரனையும் பொட்டு அம்மானையும் நீக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜூலை 8 ஆம் திகதி லோக்சபையில் கருத்து தெரிவித்த இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஸ்ணா, ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக பிரபாகரனின் மரண சான்றிதழை இலங்கையிடமிருந்து எதிர்ப்பார்ப்பதாக தெரிவித்திருந்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • Anonymous
    Anonymous

    “இறந்தவனுக்குத்தான் மரணச்சான்றிதழ். இந்து(இந்தியா)! இதை எழுதிக் கொள்.”
    மகிந்த சிந்தனா.

    Reply
  • பயஸ்
    பயஸ்

    ஆந்திர முதல்வர் ராஜசேகரரெட்டியின் மரணத்தை அடுத்து
    நானூறு பேர் தம் உயிரை மாய்த்திருக்கிறார்கள்!!!!!
    ஆனால் பிரபாகரன் மரணத்தை அடுத்து ஒருவர் கூட
    தம் உயிரை மாய்கவில்லையே????
    இதில் இருந்து தெரிகிறதல்லவா
    ராஜசேகரரெட்டிக்கு மக்கள் மத்தியில் இருந்த அன்பும் அபிமானமும்.
    பிரபாகரன் மீது மக்களுக்கு இருந்த ஆத்திரமும் வெறுப்பும்.

    Reply
  • அர்ஜுனா அகிலன்
    அர்ஜுனா அகிலன்

    ஆந்திர முதல்வர் ராஜசேகரரெட்டியைவிட எங்கள் தலைவன் ஆயிரம் மடங்கு கெட்டிக்காரன்
    ஆந்திர முதல்வரால் தனது மரணத்திற்கு பின்புதான் ஒரு நானுறுபேரின் மரணத்திற்கு காரணமாக இருக்க முடிந்தது.
    எங்கள் தலைவர் பிரபாகரன் தான் உயிரோடு இருக்கும்போதே நாற்பதாயிரம் பேரை சொர்க்கத்துக்கு அனுப்பிவிட்டுதான் தானும் மேலே போனார்.

    Reply