Dr N S மூர்த்தி, மைக்கல் உவாட்லோ, ரட்னசபாபதி தியாகராஜா, தாமோதரம்பிள்ளை தேசஇலங்கைமன்னன், Dr நிலானி நக்கீரன், அனிதா யசோதர், Dr ஜெயதாம்பிகை ஞானப்பிரகாசம் – வெண்புறாவின் கணக்கு? வணங்கா மண்ணின் கணக்கு? உங்களுக்கே வெளிச்சம் : த ஜெயபாலன்

White_Pigeon_Logoபிரித்தானியாவில் தமிழ் மக்கள் மத்தியில் தீவிர நிதி வசூழில் ஈடுபட்ட இன்னமும் ஈடுபட்டு வருகின்ற வெண்புறா வின் கணக்குப் புத்தகம் சில பலமான கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்புகின்றது. பிரித்தானிய பொது அமைப்புகளின் ஆணைக்குழுவுக்கு வெண்புறாவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கணக்குகளில் பின்வரும் விடயங்களில் சந்தேகங்கள் எழுந்தள்ளது. (http://www.charity-commission.gov.uk/ShowCharity/RegisterOfCharities/DocumentList.aspx?RegisteredCharityNumber=1107434&SubsidiaryNumber=0&DocType=AccountList)

1. ஜனவரி 2008 வரையான 12 மாதங்களில்

சேகரிக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட நிதி 224,865 பவுண்கள்.
நிதி சேகரிப்பிற்கு ஏற்பட்ட செலவீனம் 58,632 பவுண்கள்.
ஊனமுற்றவர்களின் புனர்வாழ்வுக்கு வழங்கப்பட்ட நிதி 37,392 பவுண்கள்.
நிர்வாகச் செலவீனம் 64,367 பவுண்கள்.
தாயகத்தினுள்ளே இடம்பெயர்ந்தவர்களின் மீள் குடியேற்றத்திற்கு வெண்புறா எவ்வித உதவியையும் வழங்கவில்லை. White_Pigeon_Account

2. வெண்புறா (White Pigeon) பொதுஅமைப்பு உவைற்பிஜின் லிமிடட் (White Pigeon Ltd) உடன் நேரடியாகத் தொடர்புபடுத்தப்பட்டு உள்ளது. உவைற் பிஜின் லிமிடட் பிரித்தானியாவில் பதிவு செய்யப்பட்டு உள்ள ஒரு வரையறுக்கப்பட்ட கொம்பனிச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள அமைப்பு. ஆனால் உவைற்பிஜின் லிமிடட்டின் பிரதான பங்குதாரர் நமச்சிவாயம் உவைற் பிஜின் லிமிடட் (Namasivayam White Pigeon’ Ltd) நமச்சிவாயம் உவைற்பிஜின் லிமிடட் பிரித்தானியாவில் பதிவு செய்யப்பட்ட ஒரு கொம்பனி அல்ல. பிரித்தானியாவில் பொது நிறுவனமாக வெளிப்படையாக இயங்க வேண்டிய வெண்புறாவின் பிரதான பங்குதாரர் நமச்சிவாயம் உவைற்பிஜின் லிமிடட் பற்றிய எந்தத்தகவலும் பொதுத் தளத்தில் இல்லை. நமச்சிவாயம் சத்தியமூர்த்தி அவர்களுக்கே அது வெளிச்சம்.

3. வெண்புறாவிடம் 487,778 பவுண் நிலையான சொத்தான காணியும் கட்டிடமும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த நிலையான சொத்தில் இருந்து எவ்விதமான வருமானத்தையும் (வாடகை, குத்தகை) ஈட்டுவதாக வெண்புறா கணக்கு தெரிவிக்கவில்லை.

சர்வதேச விடுதலைப் போராட்டங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ் மக்கள் தங்கள் விடுதலைக்காக செய்த தியாகங்களும் அர்பணிப்புகளும் மகத்தானது. ஆனால் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கின்றோம் என்ற பெயரில் தமிழ் விடுதலை அமைப்புகள் குறிப்பாக ஏகபோக தலைமையாக தங்களை நிலை நாட்டிய தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையும் அதற்கு ஜால்ரா போட்டு வந்த புலம்பெயர்ந்த அமைப்புகளும் மக்களை தவறாக வழிநடத்தி மாபெரும் மனித அவலத்திற்குள் வன்னி மக்களைத் தள்ளியுள்ளன. வன்னியில் இடம்பெற்ற பல்லாயிரக் கணக்கான கொலைகளுக்கு இலங்கை அரச படைகளும் தமிழீழ விடுதலைப் புலிகளுமே பொறுப்பு. தமிழீழ விடுதலைப் புலிகள் கொலைக் களத்திற்குள் மக்களை தடுத்த வைத்திருந்ததை ஆதரித்த பேர்ள் (PEARL), பிரித்தானிய தமிழ் போறம் (BTF) போன்ற அமைப்புகள் அக்கொலைகள் நிகழ்வதற்கு உடந்தையாக இருந்துள்ளன. இலங்கை அரச படைகளும் தமிழீழ விடுதலைப் புலிகளும் முதல் தரக் கொலைக் (first degree murder) குற்றவாளிகள். பிரிஎப் பேர்ள் போன்ற புலம்பெயர்ந்த அமைப்புகள் கொலைக்கு காரணமாக (manslaughter) இருந்தவர்கள்.

இந்த புலம்பெயர்ந்த அமைப்புகள் வன்னியில் மக்கள் கொல்லப்படுவதன் மூலம் சர்வதேச அனுதாபத்தைப் பெற்று தமிழீழத்தை வென்றெடுக்கலாம் என இறுதிவரை நம்பிக்கையுடன் இருந்தன. இன்னும் சிலர் இன்னும் அந்த நம்பிக்கையில் உள்ளனர். வன்னியில் கொல்லப்படும் எண்ணிக்கை பத்து நூறு ஆயிரம் என நாளுக்கு நாள் உயர லண்டன், பாரிஸ், பேர்ளின், ரொறன்ரொ வோசிங்டனில் தமிழீழத்தை நெருங்கிவிட்டதாக பிரச்சாரம் முடுக்கிவிடப்பட்டது.

தம் உறவுகளின் அவலம் கண்டு மக்கள் உணர்வுகள் மிக உச்சத்தில் நிற்க, அதனைக் காசாக்குவதில் ஒரு பகுதி மிகத் தீவிரம் காட்டியது. தமிழீழம் பட்ச், தமிழீழம் ரி சேட், புலிக் கொடி என்று பல்லாயிரக் கணக்கில் வியாபாரம் இடம்பெற்றது. அதைவிட வெண்புறா, ரிஆர்ஓ என்ற பெயர்களில் நிதி சேகரிக்கப்பட்டது. இவற்றைவிட வெண்புறா ரிஆர்ஓ போட்ட குட்டி அமைப்புகளும் புதிய புதிய பெயர்களில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டன.

இவை ஒரு பக்கத்தில் நிதிவசூலில் சாதனை படைக்க வானொலி தொலைக்காட்சிகளும் தங்கள் பங்கிற்கு வர்த்தகர்களைக் கசக்கிப் பிழிந்தனர். தேசியத் தொலைக்காட்சி, தேசிய வானொலி, தேசியப் பத்திரிகை என்று தமிழ் தேசியம் ஏகபோகமாக வியாபாரத்தில் இறங்கியது.

இன்னொரு பக்கத்தில் பல பத்தாயிரக் கணக்கில் ஆயுதக் கொள்வனவிற்கும் புலம்பெயர்ந்த நாடுகளில் நிதி திரட்டப்பட்டு உள்ளது. வர்த்தக நிறுவனங்கள் பல்லாயிரக் கணக்கில் நிதி வழங்க நிர்ப்பந்திக்கப்பட்டன. மே 18ல் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒட்டுமொத்த தலைமையும் சரணாகதி அடைந்து கொல்லப்பட்ட பின்னரும் இந்த நிதி சேகரிப்பு நிறுத்தப்படவில்லை. இன்னமும் தொடர்கிறது.

அண்மையில் லண்டனில் உள்ள சைவ ஆலயங்களின் திருவிழாக் காலம். அதனை குறி வைத்து நிதி வசூலிப்பு முடக்கி விடப்பட்டு இருந்தது. லண்டனில் மட்டுமல்ல இந்த நிதி வசூலிப்பு பரவலாக புலம்பெயர்ந்த நாடுகள் எங்கும் நடைபெற்றுள்ளது.

சுனாமி, கண்ணீர் வெள்ளம், யுத்த அவலம் என்று தாயக மக்களின் அவலங்களை காசாக்கியவர்கள் இன்று வன்னி முகாம்களை மையப்படுத்தி நிதி சேகரிப்பில் தொடர்ந்தும் ஈடுபட்டு உள்ளனர். வன்னி முகாம்களுக்குள் சர்வதேச உதவி அமைப்புகளையே இலங்கை அரசு அனுமதிக்கவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் சார்ந்த எந்த ஒரு உதவி அமைப்பும் வன்னி முகாம்களில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருக்கவில்லை. நிலைமை அப்படி இருக்கையில் அந்த மக்களின் பெயரில் நிதி வசூல் செய்வது பகற்கொள்ளை அல்லாமல் வேறு என்ன.

இதுவரை சேர்க்கப்பட்ட நிதிக்கு என்ன நடந்தது என்பது பற்றி எந்த நிறுவனமும் கணக்குகளைச் சமர்ப்பிக்கவில்லை.

Vanni_Missionவர்த்தக நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்கள் ஈட்டிய லாபத்திற்கு வரி செலுத்தாமல் தப்பிப்தற்காக நட்டம் ஈட்டக் கூடிய ஒரு திட்டத்திற்கு முதலிடுவார்கள். அவ்வாறு இந்த நிதிசேகரிக்கின்ற அமைப்புகள் இட்ட முதலீடு தான் வணங்காமண். இது வன்னி மக்களுக்கு உதவி வழங்க மேற்கொள்ளப்பட்ட திட்டமல்ல என்பதனை இத்திட்டம் அறிவிக்கப்பட்ட உடனேயே தேசம்நெற் இல் பலரும் எழுதி இருந்தோம். இதுவரை வணங்கா மண் உதவி வன்னி மக்களைச் சென்றடையவில்லை. இதுவரை வணங்கா மண் திட்டத்தை மேற்கொண்டவர்கள் எவ்வித கணக்கு வழக்குகளையும் சமர்ப்பிக்கவில்லை.

‘ஆற்றில் போட்டாலும் கடலில் போட்டாலும் அளந்து போடு’ என்பது தமிழர் வழக்கு. வணக்கா மண்ணில் எவ்வளவு போட்டீர்கள்? என்பதை சொல்வதற்கு என்ன தயக்கம்.

தமிழ் மக்களின் பெயரில் சேகரிக்கப்பட்ட ஒவ்வொரு பெனிக்கும் ஒவ்வொரு சென்ஸ்க்கும் ஒவ்வnhரு சதத்திற்கும் கணக்குக் காட்ட வேண்டிய கடமைப்பாடு நிதி சேகரித்தவர்களுக்கு உண்டு. அதைக் கேட்கின்ற உரிமை எமக்குண்டு.

வெண்புறா மற்றும் வெண்புறா லிமிட்டட் அமைப்புகளின் கணக்கு விபரங்களின் படி 2008 ஜனவரி 31ல் முடிவடைந்த நிதியாண்டில் இவர்கள் இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்துவதில் எவ்வித உதவிகளையும் வழங்கி இருக்கவில்லை. ஊனமுற்றவர்களுக்கான புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு 37,392 பவுண்கள் மட்டுமே செலவிடப்பட்டு உள்ளது.

White_Pigeon_Logoஆனால் வெண்புறா அதே காலப்பகுதியில் 224,865 பவுண்களை மக்களிடம் இருந்து வசூலித்ததை 2008 ஜனவரி 31ல் முடிவடைந்த நிதி ஆண்டுக்கான கணக்கறிக்கை உறுதிப்படுத்துகின்றது. அந்நிதியாண்டு வெண்புறாவின் செலவீனம் 160,391 பவுண்கள். வெண்புறாவின் மொத்த செலவீனத்தில் இருந்து அவர்கள் உதவிய தொயை கழித்துக்கொண்டால் வரும் (160,391 – 37,392 =)  122,999 பவுண்கள் அவர்களுக்கு மேற்படி உதவியை வழங்க ஏற்பட்ட செலவீனம் ஆகும். 37,392 பவுண் உதவியை வழங்க 122,999 பவுண் செலவு ஏற்பட்டு உள்ளது.

தாயக மக்களின் சோகங்களையும் கண்ணீரையும் அவலங்களையும் பவுண்களாக்கிய வெண்புறா அம்மக்களுக்கு வழங்கியது மூன்றிலொரு பங்கு மட்டுமே. இந்த 122,999 பவுண்களுக்கு வெண்புறா காட்டும் கணக்கு இதோ:
Costs of generating funds – Fund raising activities and publications – 58,632
Governance costs – 34,237
Other resources expended – 30,130

பொதுவாகவே பொது ஸ்தாபனங்கள் தங்கள் கணக்கறிக்கையை பதிவு செய்யப்பட்ட சுயாதீன கணக்காளிர்களிடம் கொடுத்து ஓடிற் செய்வது வழமை. பொது ஸ்தாபனங்களுக்கு  சட்டப்படியான பொறுப்பு இல்லாவிட்டாலும் பெரும்பாலும் பொது ஸ்தாபனங்கள் அதனை ஒரு நல்ல நடைமுறையாகப் பேணுவது வழமை. ஆனால் வெண்புறா அவ்வாறான எந்த நடைமுறையையும் கடைப்பிடிக்கவில்லை.

2008 ஜனவரி 31க்குப் பின் தற்போது 18 மாதங்கள் ஓடிவிட்டது. தமிழ் மக்கள் வரலாறு காணாத அவலத்தைச் சந்தித்துவிட்டனர். அந்த அவலங்களையெல்லாம் வெண்புறா பவுண்களாக மாற்றிக் கொண்டுள்ளது. ஆனால் வெண்புறா தாயகத்தில் காத்திரமான எந்த உதவி நடவடிக்கையையும் மேற்கொண்டதற்கான தடையங்கள் அதன் இணையத் தளத்தில் கூட இல்லை. வெண்புறா போன்ற தமிழீழ விடுதலைப் புலிகளுடன் அடையாளம் காணப்பட்ட எந்த அமைப்பும் இலங்கையில் புனர்வாழ்வு மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை.

ஆனால் வெண்புறா புலம்பெயர்ந்த மக்களின் உணர்வுகளை பவுண்களாக தனது உண்டியலினுள் சொரியச் செய்வதில் தீவிரமாக உள்ளது. அண்மையில் இடம்பெற்ற லண்டன் தேர்த் திருவிழாக்களில் எல்லாவற்றிலும் வெண்புறா உண்டியல் குலுக்கத் தவறவில்லை.

சுண்டக்காய் கால் பணம் சுமை கூலி முக்கால் பணம் என்ற கணக்கில் அனுப்பப்பட்ட வணங்கா மண் பொருட்கள் லண்டனில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் சிலவற்றுக்கு விற்றது போக மிகுதி பல மாதங்களாகியும் இன்னமும் வன்னி மக்களைச் சென்றடையவில்லை. மக்களுக்கு வழங்கும் நிவாரண உதவியை அரசியலாக்கி அதனால் சுமந்து சென்ற கப்பலுக்கும் காப்புறுதி நிறுவனங்களுக்கும் பணத்தை வழங்கியது ஒன்றே நடந்தது.

வணங்கா மண் ஏற்பாட்டுக் குழுவினராக ஜிரிவி யால் அறிமுகப்படுத்தப்பட்ட கவுன்சிலர் தயா இடைக்காடர், கலாநிதி நித்தியானந்தன், Dr புவி ஆகியோரைக் கொண்ட Dr N S மூர்த்தி தலைமையிலான குழுவிற்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனத் தெரிவிக்கிறார் கலாநிதி நித்தியானந்தன். வணங்கா மண் க்கு நிதியுதவி செய்ததை ஜிரிவியில் வெளியிட்டனர். அந்த நேர்காணலில் தன்னை ஏற்பாட்டாளர்களில் ஒருவராக குறிப்பிட்டது பற்றி தனக்கு எதுவும் தெரியாது எனத் தெரிவித்தார் கலாநிதி நித்தியானந்தன். தேசம்நெற் ஏற்பாடு செய்த கூட்டம் ஒன்றிலேயே அவர் இதனை வெளியிட்டார். வணங்கா மண் பிரித்தானிய பொது அமைப்புகளிள் ஆணைக்குழுவின் கீழ் பதிவு செய்யப்பட்ட அமைப்பல்ல. அது பற்றிய கணக்கு விபரங்கள் பொதுத் தளங்களில் இல்லை. ஜிரிவி யில் வெளியான வணங்கா மண் ஏற்பாட்டுக் குழுவின் நேர்காணலை பார்க்க அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்.

வணங்காமண் ஏற்பாட்டலர்களை நேர்காண்கிறார்கள் GTV www.tubetamil.com 2
வணங்காமண் ஏற்பாட்டலர்களை நேர்காண்கிறார்கள் GTV www.tubetamil.com 3

பிரித்தானிய பொது அமைப்புகளின் ஆணைக்குழுவின் படி (http://www.charity-commission.gov.uk/ShowCharity/RegisterOfCharities/ContactAndTrustees.aspx?RegisteredCharityNumber=1107434&SubsidiaryNumber=0) வெண்புறா அறக்கட்டளையினர்: Dr N S மூர்த்தி, மைக்கல் வவாட்லோ, ரட்னசபாபதி தியாகராஜா, தாமோதரம்பிள்ளை தேச இலங்கைமன்னன், Dr நிலானி நக்கீரன், அனிதா யசோதர், Dr ஜெயதாம்பிகை ஞானப்பிரகாசம் ஆகியோர் பதிலளிக்க வேண்டிய நேரமிது. 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

24 Comments

  • பார்த்திபன்
    பார்த்திபன்

    மூர்த்தி,தயா இடைக்காடர், மற்றும் மைக்கல் வவாட்லோ, ரட்னசபாபதி தியாகராஜா, தாமோதரம்பிள்ளை தேச இலங்கைமன்னன், நிலானி நக்கீரன், அனிதா யசோதர், ஜெயதாம்பிகை ஞானப்பிரகாசம் போன்றவர்களின் வண்டவாளங்களை பகிரங்கமாக எழுதுவதோடு நிறுத்தி விடாமல், சட்டப்படி நடவடிக்கை பிரித்தானியா வாழ் தமிழ்மக்கள் இணைந்து எடுக்க வேண்டும். இதற்குரிய ஆலோசனைகளையும், வழிகாட்டலையும் தேசம்நெற் போன்ற ஊடகங்களும் நேர்மையாக வாழ நினைக்கும் வழக்கறிஞர்களும் செய்ய முன் வர வேண்டும். இதுவரை இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதாலேயே இவர்கள் பயமின்றி தொடர்ந்தும் தம் சுருட்டலை செய்து வருகின்றார்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமாயின் உடனத் தேவை சட்டப்படியான நடவடிக்கையே!!!

    Reply
  • சட்டம் பிள்ளை
    சட்டம் பிள்ளை

    ஏமாறுபவர்கள் உள்ள வரை – எமாற்றுபவர்கள் இருக்கவே செய்வார்கள்

    Reply
  • suban
    suban

    இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தமுதல் இவர்களை முதலில் நிறுத்தவேண்டும்.

    Reply
  • watch
    watch

    Dear Mr Jayapalan,
    Are you ………………………..?
    They have summited upto THE YEAR ENDED 31 JANUARY 2008. Within this period where would be the displaced people fits. You got to wait until you see the Accounts YEAR ENDED 31 JANUARY 2010. Just stop critising and ………………………

    Reply
  • watch
    watch

    //தாயகத்தினுள்ளே இடம்பெயர்ந்தவர்களின் மீள் குடியேற்றத்திற்கு வெண்புறா எவ்வித உதவியையும் வழங்கவில்லை.// – Jeyabalan

    Didn’t you read the below
    Charitable activities – 2007 in page 6
    Resettlement programme for internally displaced – £92,306

    Are you Jealous of Venpura?

    Reply
  • Vannikkumaran
    Vannikkumaran

    தேசம்நெற்றுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்
    தமிழரின் இன உணர்வை பயன்படுத்தி இப்படி அநியாயம் செய்யும் பிணம் தின்னி மனித பிசாசுகளை அந்தந்த புலம் பெயர் நாட்டுச் சட்டத்தின் முன் நிறுத்தி அதிக பட்ச தண்டனை பெற ஆவன செய்ய ஏதாவது ஓர் ஏற்பாடு செய்ய முடியாதா?

    சட்டம் பிள்ளை
    தமிழரின் வரலாற்றில் உம்போல் நொண்டிச்சாட்டுகளைச் சொல்லி ஆறுதலடையக் கூடிய விடயம் இது இல்லை.
    இப்படி எமுதுபவர்களையும் சித்திப்பவர்களையும் போட்டுத்தள்ளியும் துரோகி என்று பட்டம் கட்டி மொனிகளுமாக்கி விட்டு மொனமாக போய்ச் சேர்ந்திட்டார் சீமான். அவருக்கு வன்னிச்சனம் உதவியை தவிர எதுவுமே செய்யவில்லை. ஆனால் அந்தமக்கள் மீது பலாத்காரத்தையும் பாசிச கொலைவெறியையும் கட்டவிழ்த்து விட்டதை தவிர அவரால் மேலதிக உதவிகளை வழங்க முடியவில்லை.

    இப்படி எழுதுவதால் நான் ஒன்றும் சிங்கள தமிழின கொயைரசின் கூட்டாளி எண்டு வழமையான கருத்துக் கணிப்பையும் பரப்புரையையும் நிறுத்தி சிங்கள அரசை சர்வதேச ரீதியாக ஒடுக்க முயற்சிக்கும் காத்திரமான நடவடிக்கைகளுக்கு சமமாக இன்னும் எம்மை தமிழினத்தை அழிக்க ஆசைப்படும் வெண்புறா போன்ற அமைப்புக்களை கழைய முற்படுங்கள். இல்லாது போனால் புலம்பெயர் தேசங்களில் எதிர்காலத்தில் எம் சிறார்களையும் நாம் இந்த எமகாதர்களின் சமூகத்துரோக நடவடிக்கைகளில் பலி கொடுக்க நேருவதுடன் அவமானத்தையும் எம்மினம் பெற்றுக் கொள்ளும்.

    கடந்த வாரம்வெளியான சனல் 4 காணொலியில் எம்மக்களை மிருகத்தை விடக் கேவலமாக சுட்டுக் கொல்லும் காட்சியை பார்க்கும் போது மனிதர்களுக்கும் தமிழர்களாகிய எமக்கும் எவ்வளவு மனவலி ஏற்படட்டது என்பது உங்களுக்கு தெரியுமா?

    இன்று கிழக்கின் தலைமையை கருணாவும் பிள்ளையானும் கைப்பற்றினர் வடக்கின் (யாழ்ப்பாணம்) தலைமையை புலம்பெயர் மக்கள் கையிலெடுக்கிறார்கள். வன்னியின் தலைமை யார்? அதை ஏற்கனவே புலிகளின் தலைமை அழித்த பின்பே வன்னிக்குள் தன் காலை அகலவிரித்தது.

    1984 ல் வன்னிக்குள் புதுக்குடியிருப்பில் ஆளுமை மிக்க ஓர் தமிழ் தலைவன் காசிப்பிள்ளை தம்பாபிள்ளையையும் அதே வாரம் மேலும் 9 புதுக்குடியிருப்பு மக்களை மக்கள் கண்முன்னே சிலரை கண்ணைக்கட்டியும் சிலரைக் கண்ணைக் கட்டாமலும் அதிலும் சிலரை அவர்களது ஊரிலேயே அவர்கள் பிறந்து வளர்ந்த மண்ணில் உறவுகளின் முன் நிர்வாணமாக்கி சுட்டார்கள் புலிகள்.

    அதைவிடக் கொடுமை பல வாரங்களின் பின் அந்த மரணதண்டணைகள் தவறுதலாக நிகழ்துவிட்டதற்காக மனம் வருந்துகிறோம் என்று புலிகள் மனம் கூசாமல் ஓர் குற்ற உணர்வு பயம் இல்லாமல் விட்ட அறிக்கை எவ்வளவு குருரமானதும் கொடுமையானதும் என்பது மட்டுமல்ல யாரும் தம்மை கேள்வி கேட்கமுடியாது என்ற ஆணவமான தலைமைத்துவமும் மக்களின் உயிர்கள் பற்றி பொறுப்பில்லாத நிலையும் இன்று புலிகளையே அழித்து விட்டது.
    இதை எந்த நீதிமன்றுக்கு கொண்டு செல்லப் போகிறோம்.

    தவிர £37+ஆயிரம் பவுண் உதவிவழங்குவதங்கு ஒரு தொண்டு நிறுவனம் £122+ ஆயிரம் பவுண்கள் செலவு செய்திருக்கிறது என்பது ஓர் பகல் கொள்ளை. நம்பிக்கை துரோகம்.

    இதற்கு ஆவன செய்து எதிர்காலத்தில் புலம் பெயர் தேசங்களில் ஆவது எம்சிறார்கள் நிம்மதியாகவும் கெளரவமாகவும் வாழ ஒன்றுதிரளும் அதேவேளை இலங்கையில் அல்லலுறும் மக்களைக் காக்க உறுதியான காத்திரமான பணிகளை திட்டமிட்டு வெளிப்படையாக செயல்பட நாம் முனையவேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்ளுகிறேன்.

    வன்னிக்குமரன்

    Reply
  • மகுடி
    மகுடி

    //Charitable activities – 2007 in page 6, Resettlement programme for internally displaced – £92,306// watch

    2009ல் இடம் பெயர்ந்தோருக்காக 2007ல் செலவழித்தார்களா?

    Reply
  • மாயா
    மாயா

    இப்படியானவர்களை தெரிந்தும் தம்மை வளர்த்துக் கொள்ள, இன்றும் சில ஊடகங்கள் உறுதுணை புரிகின்றன. தவறானவர்களை விளம்பரப்படுத்தி , நேர்மையானவர்களுக்கு துரோகிப் பட்டம் சூட்டுகின்றன.

    1983க்கு பின்னர் விடுதலை என புறப்பட்ட கூட்டம், இளைஞர்களையும் மக்களையும் பலி கொண்டது. கொள்ளையடித்தது. புலத்திலும் அதேதான். கொள்ளையடித்தது, நடுத் தெருவுக்கு கொண்டு வந்தது. உணர்ச்சிகளைத் தவிர, உண்மைகள் அங்கே இல்லை.

    புலத்தில் உள்ள பெரும்பாலான அமைப்புகள் தமது இருப்புக்காக பணம் பறிப்பதிலேயோ அல்லது இலங்கையில் உள்ள தமது தேவைகளையோ நிறைவேற்றிக் கொள்ள கழுகு பார்வையோடு காரியங்களில் ஈடுபடுகிறது. இதில் இந்திய புலி ஆதரவாளர்களது கருத்துகள் எமக்கு வாந்தி வரும் அளவுக்கு எழுதுகின்றன. இந்திய தமிழர்கள் எவர் செத்தாலும் தமிழீழம் வேண்டும் என எழுதுவது சுத்த சுயநலம். அவர்களுக்கு இலங்கையின் தட்ப வெட்பம் சுற்று சூழல் எதுவுமே தெரியாது.

    புலத்து இளையோரை, அல்கொய்தா போன்ற நிலைக்கு சில தமிழ் பொது அமைப்புகள் உருவாக்க இன்னமும் எத்தனிக்கின்றன. பெரும்பாலான கடும் புலி ஆதரவாளர்கள் இருந்ததை சுருட்டிக் கொண்டு வெளியேறி விட்டனர். இருப்போர் சுருட்ட கதை வசனம் எழுதி வருகின்றனர். இவர்களை செயலிழிக்க செய்வதே புலம் பெயர் தமிழரது அடுத்த கட்ட நடவடிக்கையாக இருக்க வேண்டும்.

    பிரபாகரனை உயிர்ப்பிக்க பாபா தரப்பு மெஜிக் வேலைகளில் புலிகள் ஈடுபட வழி தேடுகின்றனர். அடுத்த ஏசுவாக உயிர்க்காத அந்த நாள் வரை அடுத்தவர்கள் பொறுக்காது இருக்கும் களைகளை அழித்து புலத்து இளையோரையாவது காக்க ஒரு படை திரள வேண்டும்.

    Reply
  • uma maheswaran
    uma maheswaran

    well what can i say i gave £150.00 to vananga mann and also contrubuted some money to white pigeon. if that the case these people pocketing our money i would go back to them ask of my money. we were giving to our people not these people. am so dissapointed by this.

    Reply
  • kalis
    kalis

    எனக்கு வெண்புறா பற்றி பெரிய மதிப்பு இல்லை ஆனால் இந்த கணக்குகள் 2007 ஆண்டுக்குரியது என நினைகிறேன்.

    Reply
  • நண்பன்
    நண்பன்

    வரவு எட்டணா
    செலவு பத்தணா
    கடைசியில் துந்தனா?

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    மகுடி,
    watch போன்றவர்கள் தவறு செய்பவர்களுகக்குத் துணைபோவதை கொள்கையாகக் கொண்டவர்கள். தவறு செய்பவனை விட தவறுக்கு துணை போவர்களிடத்தில் நாம் மிக அவதானமாக இருக்க வேண்டும். முன்பு புலிகளும் அவர்களது தவறுகளைச் சுட்டிக் காட்டியவவர்களை துரோகிப்பட்டம் கட்டி மகிழ்ந்தார்கள். அதுபோல் watch உம் ஜெயபாலனுக்கு ஏதாவது பட்டம் கட்டி மிரட்டினால் இப்படியான செய்திகளை ஜெயபாலன் வெளியிடாமல் விடுவார் என்று எதிர்பார்க்கின்றார் போலும். உண்மைகள் சிலருக்கு உறைக்கத்தான் செய்யும். முடிந்தால் இவர் வெண்புறாவின் செலவு விபரங்களில் சுண்டங்காய் காலப்பணம் சுமைகூலி முக்காலப்பணம் என்பதற்கு நேர்மையாக விளக்கம் தரட்டுமே!!!!

    Reply
  • BC
    BC

    இந்த கொடுமையை வெளியே கொண்டு வந்ததிற்க்கு நன்றி ஜெயபாலன்.

    Reply
  • Anonymous
    Anonymous

    வெண்புறா தொடங்கிய நாள் எது? நேற்று வரை எங்கிருந்தீர்கள்? இன்றுதான் கணக்கும் வழக்கும் பிழைக்கிறதோ? ஓடினால் தேர். ஊர்ந்தால் புழுவோ. நடந்த இனப்படுகொலைகளுக்கு அரசும், புலிகள் மட்டுமல்ல,காரணம்…………………………. எனக்கு கிடைக்காதது எவருக்கும் கிடைக்க கூடாதென்பது உஙகள் முயற்சி. புலிகளும் இதையே செய்தார்கள். புலிகள் மற்றவர்களில் பழி போட்டு துன்பமடைந்தார்கள். நீங்கள் புலிகளில் பழி போட்டு இன்பமடைகிறீர்கள்.

    ஒரிரு உதவி நிறுவனங்களைத் தவிர, எல்லோரும் பணம் சுருட்டும் வழியாகத்தான் உதவி நிறுவனங்களை உருவாக்கிறார்கள். வெண்புறா விதிவிலக்கல்ல. டாகடர்களும், லாயார்களும் இதில் கில்லாடிகள்..

    Reply
  • Jeyabalan T
    Jeyabalan T

    நண்பர் watch நீங்கள் கட்டுரையை கவனமாக வாசியுங்கள் அதில் மிகத் தெளிவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது ”1. ஜனவரி 2008 வரையான 12 மாதங்களில் அதற்குப் பின்னான கணக்குகள் இன்னமும் சமர்ப்பிக்கப்படாததால் இறுதியாகக் குறிப்பிட்ட கணக்குப் பற்றியே கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது.

    இக்காலப்பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் எங்கே பொருந்துவார்கள் என்று கேள்வி எழுப்பி இருக்கிறீர்கள். தற்போதைய அவலம் நிறைவு பெற்றது தான் வன்னியில் அதன் ஆரம்பம் கிழக்கில் மாவிலாறு. கிழக்கில் மக்கள் இடம்பெயர்ந்து அகதியானார்கள் என்பதைக் கூட நீங்கள் அறிந்திருக்கவில்லை என்பது வேதனையானது.

    மேற்படி கணக்கு சமர்பிக்கப்பட்ட காலப்பகுதியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தனர். மக்கள் சொந்த இடங்களைவிட்டு கால்டையாக பல மைல் துரத்தைக் கடந்து பாதுகாப்புத் தேடினர்.

    இக்கட்டுரை குற்றச்சாட்டு அல்ல. வெண்புறா பொறுப்பாக பதில் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் எவ்வித தவறும் இல்லையே.

    மேலும் நீங்கள் குறிப்பிட்ட தொகைக்கான செலவு அதற்கு முந்திய ஆண்டில் செய்யப்பட்டு உள்ளது. நன்று. நாங்கள் கேள்வி எழுப்பியது. அதற்கு அடுத்த ஆண்டு பற்றி நிதி இருந்தும் செலவு செய்யப்படவில்லை. ஆனால் செலவு கணக்கு மட்டும் 122 999 பவுண்கள் ஏற்பட்டுள்ளது. இதற்கு என்ன விளக்கம்?

    த ஜெயபாலன்

    Reply
  • santhanam
    santhanam

    தேன் கையில்லிருந்தால் தொட்டு நக்கியே தீரவேண்டும் இவர்களை சொல்லி குற்றமில்லை மக்கள் மீதுதான் எனக்கு அதிககோபம். மந்தைகளாக வாழ்ந்தால்………

    Reply
  • முன்னாள் பொரளி
    முன்னாள் பொரளி

    புலிகளும் இதையே செய்தார்கள். புலிகள் மற்றவர்களில் பழி போட்டு துன்பமடைந்தார்கள். நீங்கள் புலிகளில் பழி போட்டு இன்பமடைகிறீர்கள்.

    Reply
  • raji
    raji

    Hello
    Why don’t you show your little aid accounts? ……
    Raji

    ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

    Please refer this webpage http://www.littleaid.org.uk

    Thesamnet

    Reply
  • palli
    palli

    இறுதியாக வைக்கிறேன் பல்லியின் கணக்கு வழக்குகளை; அதுவரை வையித்தியரும் அவர் சார்ந்த சகாக்களும் தூங்கட்டும்;

    Reply
  • நண்பன்
    நண்பன்

    முன்னாள் பொரளி , அடுத்தவன் இனியும் தவறு செய்யாதிருக்கவே சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது. இல்லாவிட்டால் எல்லோரும் தொடர்ந்தும் தவறு செய்வார்கள். அரசு செய்யும் போது சுட்டிக் காட்டினால் அதை பெரிது படுத்துவதில்லை. அது //புலிகள் மற்றவர்களில் பழி போட்டு துன்பமடைந்தார்கள். நீங்கள் புலிகளில் பழி போட்டு இன்பமடைகிறீர்கள்// என்று சொல்ல முடியாததாலா?

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //வெண்புறா தொடங்கிய நாள் எது? நேற்று வரை எங்கிருந்தீர்கள்? இன்றுதான் கணக்கும் வழக்கும் பிழைக்கிறதோ?//

    வெண்புறா தொடங்கிய காலகட்டத்திலிருந்தே மூர்த்தியின் கடந்தகால சுயநல நடவடிக்கைகளையும், தற்போதும் வன்னி மக்களைச் சாட்டியே சுருட்டலை மேற்கொள்ளுகின்றார் என்பதையும் பலமுறை சுட்டிக் காட்டினோம். அப்போதெல்லாம் தம் மீது சேறு பூச முனைகின்றார்கள் என்று முட்டைக் கண்ணீர் வடித்ததோடு, பாதிக்கப்பட்ட அங்கவீன போராளிகளின் மற்றும் குழந்தைகளின் படங்களை திரும்பத் திரும்ப இணைத்து தம்மை ஏதோ இரட்சகர் போல மக்கள் மத்தியில் பிரச்சாரத்தை மூர்த்தி மேற்கொண்டு மக்களை ஏமாற்றுவதில் தொடர்ந்தும் வெற்றி கண்டார். தற்போது தான் புலிகளின் அழிவின் பின் மூர்த்தி போன்றவர்களின் வண்டவாளங்களை, கூட இருந்தவர்களே வெளிக்கொணரும் நிலை ஏற்பட்டுள்ளது. எனியும் மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட வேண்டுமென்பதில் தங்களுக்கு என்ன ஆவலோ??

    //புலிகளும் இதையே செய்தார்கள். புலிகள் மற்றவர்களில் பழி போட்டு துன்பமடைந்தார்கள். நீங்கள் புலிகளில் பழி போட்டு இன்பமடைகிறீர்கள்.//

    புலிகள் தங்கள் தவறுகளைச் சுட்டிக் காட்டியவர்களிலேயே பழி போட்டு தம்மை காப்பாறற முனைந்தார்கள். ஆனால் இன்று புலிகளைச் சாட்டி பிழைப்பு நடத்தியவர்கள், அதே வழிமுறையை தொடர்ந்தும் கடைப்பிடித்து மக்களை மாக்கள் ஆக்கப் பார்க்கின்றார்கள். அதனால்த் தான் இதற்கு ஒரு முடிவு கட்டவே இதனை உரத்துக் கூறுகின்றோம்.

    Reply
  • Jeyabalan T
    Jeyabalan T

    இக்கட்டுரை வெண்புறா மீது குற்றம் சாட்டவில்லை. ஆனால் வெண்புறாவின் கணக்குப் புத்தகங்களில் காணப்படும் விடை தெரியாத வினாக்களை எழுப்பி உள்ளது. பொது அமைப்பு என்ற வகையில் வெண்புறா அமைப்பினர் பதில் சொல்லக் கடமைப்பட்டு உள்ளனர்.

    //வெண்புறா தொடங்கிய நாள் எது? நேற்று வரை எங்கிருந்தீர்கள்? இன்றுதான் கணக்கும் வழக்கும் பிழைக்கிறதோ?//
    ரிஆர்ஓ வெண்புறா வணங்கா மண் போன்ற அமைப்புகளின் கணக்கு வழக்கு தொடர்பான கேள்விகளை தேசம்நெற் ஆரம்பிப்பதற்கு முன்னரேயே புலிகளின் ஆதிக்கம் உச்சத்தில் இருந்த போதே எழுப்பப்பட்டது. இக்கேள்விகள் தேசம்நெற்றிலும் எழுப்பப்பட்டு உள்ளது.

    அனோனிமஸ் நீங்கள் சொல்ல வருகின்ற விடயங்களிலேயே தெளிவில்லாமல் உள்ளீர்கள். வெண்புறா பற்றிய கேள்வி எழுப்பியதற்கு நீங்கள் இவ்வாறு முரண்பாடான கருத்துக்களைத் தருகிறீர்கள்
    1.வெண்புறா தொடங்கிய நாள் எது? நேற்று வரை எங்கிருந்தீர்கள்? இன்றுதான் கணக்கும் வழக்கும் பிழைக்கிறதோ?
    2.எனக்கு கிடைக்காதது எவருக்கும் கிடைக்க கூடாதென்பது உஙகள் முயற்சி. புலிகள் மற்றவர்களில் பழி போட்டு துன்பமடைந்தார்கள். நீங்கள் புலிகளில் பழி போட்டு இன்பமடைகிறீர்கள்.
    3.எல்லோரும் பணம் சுருட்டும் வழியாகத்தான் உதவி நிறுவனங்களை உருவாக்கிறார்கள். வெண்புறா விதிவிலக்கல்ல.

    அனோனிமஸ் உங்களிடம் எனக்குக் கேட்கத் தோன்றுவது
    1. தொடங்கிய போது கேட்காவிட்டால் பிறகு அவர்கள் தவறிழைத்தாலும் கேட்கக் கூடாதா?
    2. விமர்சனங்களை கேள்விகளை எழுப்பினால் அது தங்களுக்குக் கிடைக்காதது என்ற ஆதங்கமாகவே இருக்குமா?
    3. எல்லோரும் பணம் சுருட்டுவதால் பொது அமைப்புகளின் கணக்கு வழக்குகளை கண்டு கொள்ளாமல் இருப்பதா?

    தயவு செய்து இது தொடர்பாக உங்கள் கருத்தை தெரியப்படுத்தவும்.

    த ஜெயபாலன்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //Hello
    Why don’t you show your little aid accounts? – Raji//

    Little aid இன் கணக்கு விபரங்களைக் கேட்டீர்கள். தற்போது Little aid இன் கணக்கு விபரங்களைப் பார்த்த பின் அதைப் பற்றிய தங்கள் கருத்தையும் பதியலாமே!! இங்கே சுண்டங்காய் முக்காலப்பணம் சுமைகூலி கால்ப்பணத்தை விட குறைந்திருப்பது தங்களுக்கு புரிகின்றதா??

    Reply
  • sumita
    sumita

    பூனையில்லாத வீட்டில்தான் எலிகளுக்கு கொண்டாட்டம் என்ற காலம் போய், இப்போ புலிகள் இல்லாத வீட்டில் பூனைகளுக்கு கொண்டாட்டம் போலல்லவா தெரிகின்றது. பணம் பத்தும் செய்யும் என்பார்கள். இப்பணம்தான் புலிகளையும் அழித்தது. பூனைகளை சும்மாவிடப் போகின்றதா. பொறுத்திருந்துதான் பார்ப்போமே, அனியாயமாக சேர்க்கும் பணம் நீடிக்காது. அனுபவித்தே ஆகவேண்டும். அதற்கான காலம் வெகுதொலைவிலில்லை.
    –தமிழனின் தாகம்,தவறுகள் தண்டிக்கப்படுவதே——

    Reply