பாராளு மன்ற உறுப்பினர் அர்ஜுன ரனதுங்க மற்றும் ஐ.நா.வதிவிடப் பிரதிநியாகப் பதவியேற்றுச் செல்லவுள்ள கலாநிதி பாலித கொஹன்னே ஆகியோருக்கு பிரிட்டன் விசா வழங்கியுள்ளதாக வெளி விவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம நேற்றுப் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். விசா மறுக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தியை முற்றாக மறுப்பதாகத் தெரிவித்த அமைச்சர், மேற்படி விசா கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார்.