உல்லாசப் பயணிகளைக் கவரும் ஆடம்பர ஹோட்டல்களைத் தாக்க பயங்கரவாதிகள் திட்டம் தீட்டியுள்ளதாக அமெரிக்கப் புலனாய்வுத் துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ முகாம்கள், அரசியல் தலைவர்களை தாக்குவது கடினமா கவுள்ளதால் பயங்கரவாதிகள் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் 2001 ம் ஆண்டு தாக்கப்பட்ட பின் பயங்கரவாதத்துக் கெதிரான இராணுவ நடவடிக்கைகள் விஸ்தரிக்கப்பட்டன.
பாதுகாப்புகளும் கடுமையாக்கப்பட்டன. இதனால் பயங்கரவாதிகளின் இராணுவ, அரசியல் இலக்குகள் தோல்வியடைகின்றன. சில தாக்குதல்கள் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. எனவே ஆடம்பர ஹோட்டல்களைத் தாக்கவும் வெளிநாட்டுப் பயணிகளைக் கடத்தவும் பயங்கரவாதிகள் தீர்மானித்துள்ளனர்.
குறிப்பாக அமெரிக்க – ஐரோப்பிய நாடுகளின் ஹோட்டல்களும், நலன்களுமே தாக்குதலுக் குள்ளாகலாமென அந்த அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.