செலியூலர் தொலைபேசியினூடாக ரயில் ஆசனப் பதிவுகளை மேற்கொள்ளக்கூடிய புதிய நடைமுறையொன்று அமுல்படுத்தப்படவுள்ளது. மொபிடெல் செலியூலர் தொலைபேசி சேவையினூடாக ஆசனப்பதிவு மேற்கொள்வதற்கு வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன.
மொபிடெல் நிறுவனத்துடன் இதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது. போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும இது தொடர்பாக சமர்ப்பித்திருந்த அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் அனுரபிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
ரயில் ஆசனம் ஒன்றைப் பதிவு செல்ல வேண்டுமாயின் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னர் ரயில் நிலையத்திற்கு நேரடியாக சென்று பதிவு செய்துகொள்ள வேண்டும். இந்தியா போன்ற நாடுகளில் ஆசனப் பதிவுகள் செலியூலர் தொலைபேசியினூடாக செய்யப்படுகின்றன. இதேபோன்று தூர இடங்களுக்குச் செல்லும் பயணிகள் ரயில் நிலையத்திற்கு செல்லாமலேயே தமது கையடக்கத் தொலைபேசியினூடாகப் பதிவு செய்து கொள்ள முடியும்.