கெக்கிராவ பிரதேசத்தில் சுமார் ஐந்து இலட்சம் ரூபா கள்ள நோட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பெண்கள் மூவரையும் எதிர்வரும் (23) ஆம் திகதி வரை விளக்கமறி யலில் வைக்குமாறு கெக்கிராவ மாவட்ட நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய பெண்களை நேற்று முன்தினம் (09) ஆம் திகதி கெக்கிராவை பொலி ஸார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போதே நீதவான் மேற்படி உத்தரவைப் பிறப் பித்தார்.
கள்ளநோட்டு தொடர்பான விசாரணைகளை இரகசியப் பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.
கெக்கிராவை நகரம் உட்பட ஏனைய பிரதேசங்களிலும் கள்ள நோட்டு மக்கள் புழக்கத்தில் உள்ளதால் பொதுமக்கள் விழிப்பாக இருக்குமாறும் இது சம்பந் தமான தகவல்கள் கிடைக்கப் பெற்றால் பொலிஸ் நிலையத்திற்கு வழங்கு மாறு கெக்கிராவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கபில அபேநாயக்க தெரிவித்தார்.