வவுனியா விலுள்ள நிவாரணக் கிராமங்களிலும் நலன்புரி நிலையங்களிலும் தங்கியுள்ள யாழ்ப்பாணம், மன்னார், திருமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த ஒரு தொகுதியினர் இன்று 11ஆம் திகதி அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். இது தொடர்பான வைபவம் வவுனியா நகர சபையின் கலாசார மண்டபத்தில் நடைபெறவிருக்கி ன்றது.
வவுனியா நிவாரணக் கிராமங்களிலும், நலன்புரி நிலையங்களிலும் இருந்து இன்று விடுவிக்கப்படும் மக்களை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்குரிய போக்குவரத்து வசதிகளை இடம்பெயர்ந்தவர்களுக்கான சர்வதேச அமைப்பு ஏற்பாடு செய்திருப்பதாக வவுனியா அரசாங்க அதிபர் அலுவலக அதிகாரியொருவர் நேற்று கூறினார்.
இவர்களுக்கு உணவு வசதியைச் செய்து கொடுப்பதற்கு யு. என். எச். சி. ஆர். நிறுவனம் முன் வந்துள்ளது எனவும் அவர் கூறினார்.
இன்று விடுவிக்கப்படுபவர்களைப் பொறுப்பெடுப்பதற்காக அந்ததந்த மாவட்ட அரசாங்க அதிபர்களின் பிரதிநிதிகள் வவுனியாவுக்கு வருகை தந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.