அரச ஊழியர்களின் வசதிக்காக அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் பல சலுகைத் திட்டங்களின் அடிப்படையில் சலுகை விலைக்கு அரச ஊழியர்களுக்கு கையடக்கத் தொலைபேசிகளை பெற்றுக்கொள்ள ஏற்பாடு nசய்யப்பட்டுள்ளதென வர்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரச ஊழியர்களுக்கான விசேட சலுகை விலையில் சம்சுங் கையடக்கத் தொலைபேசிகளை வழங்கும் திட்டத்தை அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தில் நேற்று ஆரம்பித்து வைத்து உரை நிகழ்த்திய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து அவர் கூறுகையில்.
அரசாங்கத்தின் இந்தத்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்க உலகில் தொலைபேசி தொழில் நுட்பத்தில் இரண்டாம் இடத்திலுள்ள சம்சுங் நிறுவனம் முன்வந்துள்ளமை வரவேற்கத்தக்க ஒன்றாகும். இத்திட்டத்தின் ஊடாக சலுகை விலைக்கு தொலைபேசிகளை கொள்வனவு செய்வதற்கு அரச ஊழியர்களுககு கடனுதவி வழங்க தேசிய சேமிப்பு வங்கி முன்வந்துள்ளது.
இதேவேளை இந்தத்திட்டத்தை அரச வர்த்தக கூட்டுத்தாபனம்
மேற்கொள்வதுடன் இதன் மூலம் அரச ஊழியர்களுக்கு பல சலுகைகளும் வழங்கப்படுகின்றன.
சுந்தையில் நிலவும் விலையை விடக் குறைந்த விலைக்கு பொருள் கிடைப்பது. கொள்வனவு செய்யும்போது அதனை முற்றாகப் பரிசோதித்து கொள்வனவு செய்யலாம். உத்தரவாதச் சாண்றிதழ் ஒன்றும் வழங்கப்படுகிறது. மேலும் இவ்வாறு விநியோகிக்கப்படும் கையடக்கத் தொலை பேசிகளின் திருத்த வேலைக்கு என விசேட அலகு ஒன்றும் நிருவப்பட்டுள்ளது.
மொபிடெல் உபஹார பெற்றுள்ள அரச ஊழியர்களுக்கு இத்திட்டத்தின் ஊடாக மேலும் பல சலுகைகளும் வழங்கப்பட உள்ளன.