அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணை 87 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது. அவசரகாலச் சட்டத்துக்கு ஆதரவாக 100 வாக்குகளும் எதிராக 13 வாக்குகளும் செலுத்தப்பட்டன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரேரணைக்கு எதிராக வாக்களித்ததுடன் மக்கள் விடுதலை முன்னணி வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.