சர்வாதி காரி ஹிட்லர் பெண் ஒருவருடன் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை சித்திரிக்கும் புதிய ஜேர்மனிய எயிட்ஸ் விளம்பரம் ஒன்று, ஐரோப்பா எங்கும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் மேற்படி விளம்பரமானது ஜோசப் ஸ்டாலின், சதாம் ஹுசைன் ஆகியோர் பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுவதை சித்திரிக்கும் காட்சிகளையும் உள்ளடக்கியுள்ளது.
இந் நிலையில் இன ரீதியான வெறுப்புணர்வை பிரதிபலிக்கும் இந்த விளம்பரத்துக்கு ஐரோப்பா எங்குமுள்ள ‘எயிட்ஸ்’ விழிப்புணர்வு தொண்டர் ஸ்தாபனங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ‘எயிட்ஸ் என்பது ஒரு மக்கள் கொலையாளி’ என்ற தலைப்பில் ஆங்கிலம் ஜேர்மன், மற்றும் ஸ்பானிய மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த விளம்பரம், எதிர்வரும் வாரம் தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்படவுள்ளது.
இந்த விளம்பரமானது எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளை அலட்சியப்படுத்துவதாக உள்ளதாகவும் தமக்கு எயிட்ஸ் நோய் உள்ளதா என பரிசோதிப்பதற்கு வெட்கப்பட்டு பின்வாங்கும் நிலையை மக்கள் மத்தியில் தோற்றுவிப்பதாக உள்ளதாகவும் பிரித்தானியாவை அடிப்படையாக கொண்டு செயற்பட்டு வரும் எயிட்ஸ் விழிப்புணர்வு தொண்டர் ஸ்தாபனமான ‘ரெரன்ஸ் ஹைக்கின் டிரஸ்ட்’ குற்றஞ்சாட்டியுள்ளது.
இது தொடர்பில் மேற்படி விளம்பரத்தை தயாரித்த டாஸ் கொமிட்டி முகவர் நிலையத்தின் ஆக்க பணிப்பாளர் டிர்க் சில்ஸ் விபரிக்கையில், “இந்த விளம்பரமானது மக்களை அதிர்ச்சியடையச் செய்து ‘எயிட்ஸ் எச்சரிக்கை’ தொடர்பில் அவர்களது கவனத்தைத் திசை திருப்புவதை நோக்காகக் கொண்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
palli
அப்படியே பண்றி காச்சலுக்கு பின்லாடன் படங்களையும் போட்டு விழிப்புணர்வு செய்யலாமே,