மேற்கு நாடுகள் இலங்கையை விமர்சிப்பதை விடுத்து உதவ முன்வரவேண்டும் – பிரான்ஸ் சஞ்சிகைக்கு ஜனாதிபதி பேட்டி

slpr080909.jpgமேற்கு நாடுகள் எம்மை நியாயமற்றமுறையில் விமர்சிப்பதைவிடுத்து எமக்கு உதவ முன்வர வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புலிப்பயங்கரவாதிகளுக்கெதிரான போர் வெற்றியின் பின்னர் முன்னணி ஐரோப்பிய சஞ்சிகையொன்றுக்கு முதற்தடவையாக வழங்கிய பேட்டியொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் பயங்கரவாதத்திற்கெதிரான போரில் கடந்த 30 வருடங்களாக பாதிக்கப்பட்டிருந்த மக்களை மீள் குடியேற்றும் பணிகளுக்கு மேற்கு நாடுகள் உதவ முன்வர வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி மனித உரிமை விடயங்களில்; கவனயீனமாக இருப்பதாக மேற்கு நாடுகள் அவர் மீது முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டுக்களுக்கும் இப்பேட்டியின்போது பதில்களை வழங்கியுள்ளார்.

நாட்டில் சமாதானத்தை எவ்வாறு மீளக் கட்டியெழுப்பப்போகின்றீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த ஜனாதிபதி,  வட மாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்திருக்கும் மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீள் குடியேற்றுவதற்கே மிகுந்த முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகின்றது.

மக்கள் தங்களது இருப்பிடங்களுக்கு திரும்பிச் சென்று தங்களது நிலங்களில் விவசாயம் செய்வதற்கு ஏற்றவகையில் அப்பகுதிகளில் புதைக்கப்பட்டிருக்கும் மிதி வெடிகளை அகற்றுவதே முதலாவது தேவையாகும். பின்னர் நாம் இந்த நாட்டை அபிவிருத்தியின்பால் இட்டுச் செல்ல வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்த மக்கள் ஏன் இன்னும் முகாம்களிலேயே தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர் எனக் கேட்கப்பட்டபோது புலிகளே அவர்களை பணயக்கைதிகளாக வைத்திருந்தனர். நாம் அவர்களின் பாதுகாப்பிலே கூடுதல் கவனம் செலுத்திவருகின்றோம். அவர்களை வெளியே செல்லவிட்டு மிதிவெடிகளுக்கு சிக்கவைக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *