வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் இருந்து யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 9920 பேரை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் இன்று 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் 74 யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட்ட முதல் தொகுதியினர் இன்று வவுனியா நகரசபை சைவப்பிரகாச மகளிர் கல்லூரியிலிருந்து பஸ்களின் மூலம் அனுப்பி் வைக்கப்பட்டனர்.