புதுடெல்லியில் ஒரு பள்ளியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 5 மாணவிகள் பலியாகியுள்ளனர். மேலும் முப்பது பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தோர் சிலரின் நிலை கவலைக்குறியதாக உள்ளது.
மழையால் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக பள்ளிக் கட்டிடத்தில் மின்சாரம் பாய்வதாக வதந்தி பரவியதால் இந்த நெரிசல் ஏற்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சம்பவம் நடந்த பள்ளிக்கு வெளியே கோபம் கொண்ட பெற்றோர்கள் கூடியதும் அந்தப் பகுதியில் இருந்தோரை போலீசார் அப்புறப்படுத்தினர்.
இந்திய அரசு இந்த சம்பவம் குறித்து விசாரிக்க உத்திரவிட்டுள்ளது.