குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கிளைக் காரியாலயங்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் விரைவில் அமைக்கப்படவுள்ளதாக திணைக்கள ஆணையாளர் பீ.பி. அபயகோன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் பயங்கரவாதம் முடிவடைந்துள்ள நிலையில் அரச நிருவாக சேவைகளை வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு விஸ்தரிக்கும் நோக்குடனும் அப்பகுதி மக்கள் கடவுச் சீட்டுக்களைப் பெறுவதற்காக கொழும்புக்கு நீண்ட தூரம் பிரயாணம் செய்து சிரமப்படுவதைத் தவிர்க்கும் நோக்குடனுமேயே அங்கு இந்த கிளை அலுவலகங்கள் திறக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் பொதுமக்களுடன் தொடர்புடைய பல்வேறு அரசாங்க காரியாலயங்கள் வடக்கு, கிழக்கு பகுதிகளில் அமைக்கப்பட் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.