தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான சில சர்வதேச அமைப்புக்கள் அரசாங்கத்திற்கு எதிரான சதித் திட்டங்களை தீட்டி வருவதாக ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். புலிகள் அமைப்பின் சர்வதேச வலையமைப்பு அரசாங்கத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தக் கூடிய சதி முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
லண்டன் ஆர்ஜன் மாளிகையில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்ட போது அமைச்சர் பீரிஸ் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளை சர்வதேச ரீதியாக வழிநடத்திய சில முக்கியஸ்தர்களை கைது செய்ததன் மூலம் இந்த நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிராக போலியான பிரசாரங்களை சில அமைப்புக்கள் முன்னெடுத்து வருவதாகவும், இதனை உலக நாடுகள் புரிந்து கொள்ள வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.