ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 18 வருடங்களாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நளினி, பாதிக்கப்பட்ட குடும்பமே மன்னித்துள்ள நிலையில், தன்னை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி சென்னை உயர்நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளார். நளினி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன். கடந்த 18 வருடமாக நான் சிறையில் உள்ளேன்.
இதற்கிடையே 14 ஆண்டுகள் முடிந்த பிறகு ஆயுள் தண்டனை கைதியான என்னை விடுதலை செய்யவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தேன். ஆனால் எனது விடுதலை குறித்து மறு ஆய்வு செய்யும்படி ஆலோசனை வாரியத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் ஆயுள் கைதிகளுக்கான ஆலோசனை வாரியத்தை மறுசீரமைப்பு செய்யும்படி உத்தரவிட்டது. இந்த உத்தரவு பிறப்பித்து ஒரு வருடமாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. என்னை விடுதலை செய்யவும் இல்லை. நான் ஏற்கனவே சோனியாகாந்திக்கு இது குறித்து கோரிக்கை மனு அனுப்பியுள்ளேன்.
இதற்கிடையே ராஜீவ்காந்தியின் மகள் பிரியங்கா என்னை வேலூர் சிறையில் நேரில் சந்தித்தார். அப்போது நடந்த சம்பவங்களை மறந்து என்னை மன்னித்து விட்டதாக கூறினார். பாதிக்கப்பட்ட குடும்பமே என்னை மன்னித்துள்ள நிலையில் விடுதலை செய்ய மறுக்கின்றனர். 43 வயதான எனக்கு 18 ஆண்டுகள் சிறை வாழ்க்கை கழிந்து விட்டது. எனவே ஆலோசனை வாரியம் நியமிக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை அமுல் படுத்த வேண்டும். என்னை முன் கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று நளினி தனது மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை எதிர்வரும் 14 ம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ளது
chandran.raja
ராஜீவ்காந்தியின் கொலை மறக்கவே மன்னிக்கவோ முடியாத குற்றம். இந்த கொலைக்கு திட்டம் போட்டவர்களும் சூத்திரதாரிகளும் அநேகமாக எல்லோரும் மண்ணோடு மண்னாகி இருந்த இடம் இல்லாது போய்விட்டார்கள்.கே.பி தவிர. விசாரணைக்கு உட்படுத்த வேண்டியதே!. சிலவேளைகளில் வேற்று அரசியல்வாதிகளின் பின்புலங்கள் அறியக்கூடியதாக இருக்கும். நளினி ஆரம்பம் முதல் சந்தர்பம் சூழ்நிலையில் சிக்கிக்கொண்ட பெண்னே. தான் வைத்திருந்த தொடர்புகள் ஒரு பயங்கரவாத இயக்கத்திடம் உள்ளதென்பதை அறியாமலேயே இருந்துள்ளார். அது போக நளினி ஏற்கனவே அரசியல் இயக்கங்களிலோ அல்லது சட்டவிரோத நடவடிக்கைகளிலேயோ ஈடுபட்டதிற்கான எந்த விபரமும் இல்லை.
பலசமூகங்களை கொண்ட இந்தியாவில் இந்தியாவின் ஒருமையை கருதாது தமிழனுக்கு நாடுஇல்லை ஒருநாடுவேணும். பணைமரத்திலும் தென்ணைமரத்திலும் தான் குடியிருக்கிறான் போன்ற அபத்தமான கதைகளைச்சொல்லி மேடையில் இன்றும் கூட்டம்போட்டு பேசிவரும்வேளை அவர்களை சட்டத்தின்பிடியில் தப்பவிட்டு இந்தியாவை பாதுகாக்கலாம் என்பது பொய்கதையல்லாமல் இவர்களால் என்றும் ஆபத்து உண்டு என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. இப்படிவெறி கதைகளை ஊட்டிவருபவர்கள் சுகந்திரமாக திரியும் போது சூழ்நிலை கைதியாகஅகப்பட்டு போன நளினியை நினைக்கப் பரிதாபமாகவே இருக்கிறது. நளினியின் இளமைக்காலங்கள் சிறையில் பறிபோய்விட்டது. அதன்பிறகு வாழ்வு என்பது….? நளினி அனுபவித்த தண்டணை இதுவரை மேலதிகமாவே படுகிறது. நீதிமன்றம் கருணைகாட்டி நளினியை விடுதலை செய்யவேண்டும். நமது இந்தியா ஒரு ஆன்மீகநாடு அல்லவா?.
palli
// இப்படிவெறி கதைகளை ஊட்டிவருபவர்கள் சுகந்திரமாக திரியும் போது சூழ்நிலை கைதியாகாகப்பட்டு போன நளினியை நினைக்கப் பரிதாபமாகவே இருக்கிறது. நளினியின் இளமைக்காலங்கள் சிறையில் பறிபோய்விட்டது. அதன்பிறகு வாழ்வு என்பது….? நளினி அனுபவித்த தண்டணை இதுவரை மேலதிகமாவே படுகிறது. நீதிமன்றம் கருணைகாட்டி நளினியை விடுதலை செய்யவேண்டும். நமது இந்தியா ஒரு ஆன்மீகநாடு அல்லவா?.//
இதுவே பல்லியின் கருத்தும்: இளமை பறிபோவதைவிட வேறு தண்டனை உண்டா என்ன??