கொழும்பு மாவட்டத்தில் 17 பேர் எலி காய்ச்சல் காரணமாக இறந்துள்ளதாக மேல் மாகாண பிரதி விவசாய அத்தியட்சகர் ஐ.டப்ளியூ. மெண்டிஸ் கூறினார். கொழும்பு மாவட்ட விவசாயக் குழு கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எலிக்காய்ச்சலால் இது வரை மொத்தமாக 81 பேர் இறந்துள்ளனர். கடந்த 8 மாதங்களில் (ஜனவரி முதல் ஒகஸ்ட் வரை) கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 17 பேர் இறந்துள்ளனர்.
இவர்கள் 35ற்கும் 55 வயதிற்கும் இடைப்பட்ட விவசாயிகளென அவர் சுட்டிக்காட்டினார். விவசாயக் காணிகளில் காட்டு எலி அதிகம் காணப்படுவதால், விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் விவசாயிகள் முன்கூட்டியே சுகாதார பரிசோதகர்களின் அறிவுரைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு அத்தியட்சகர் மெண்டிஸ் மேலும் கேட்டுக் கொண்டார்.
palli
இப்பத்தான் கொழும்பு புலிக்கொல்லி காச்சல் இல்லாமல் நின்மதி பெருமூச்சு விடுகிறது, அதுக்கிடையில் எலிக்காச்சல் வந்துட்டதா? இதுகூட சிலவேளை றோவின் சதியாய் அல்லது அமெரிக்காவின் அத்துமீறலாக இருக்குமோ;