தென்னா பிரிக்க ஓட்டப் பந்தய வீரங்கனையான காஸ்டர் செமென்யா சூழ்ந்துள்ள அவரது பாலினம் குறித்த சர்ச்சை, அருவருக்கத்தக்க வகையிலும் தார்மீகமற்ற முறையிலும் கையாளப்பட்டுள்ளது என்று தென்னாபிரிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
தடகள சம்மேளனங்களின் சர்வதேச அமைப்பின் உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட சோதனைகள், பெர்லின் சர்வதேச தடகளப் போட்டிகளில் தங்கம் வென்ற செமென்யாவின் உடலுக்குள் ஆண் விரைகள் இருப்பதையும், அவருக்கு சூலகம் இல்லாதிருப்பதையும் காண்பிப்பதாக ஆஸ்திரேலிய ஊடகங்களில் வெளியான செய்திகள் கூறுகின்றன. ஆனால், இது தொடர்பாக தென்னாபிரிக்காவுக்கு எந்தவிதமான தகவலும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை என்று தென்னாபிரிக்க அமைச்சர் மக்கென்கெஸி கூறியுள்ளார்.