உரிய சாட்சிங்கள் முன்வைக்கப்பட்டால் உருத்திரகுமாரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும் என அமெரிக்கா இலங்கை அரசாங்கத்திடம் அறிவித்துள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நடவடிக்கைகளை உருத்திரகுமாரன் மேற்கொண்டு வருவதாக இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியிருந்தது.
குறித்த நபரை இலங்கையிடம் ஒப்படைக்குமாறு அரசாங்கம் அமெரிக்க அதிகாரிகளிடம் கோரியுள்ளது. உருத்திரகுமாரன் எல்லைகடந்த தமிழீழ இராச்சியத்தின் தலைவராக கடமையாற்றி வருவதாக அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.