எதிர்க் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் எதிர்வரும் ஒரு மாதத்திற்குள் எதிர்க்கட்சி கூட்டமைப்பு அமைக்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மக்கள் பிரிவு ஏற்பாட்டாளர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இந்த கூட்டமைப்பே அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய அரசாங்கத்தை தோற்கடிக்கும் நோக்கிலேயே இந்த கூட்டமைப்பு உருவாக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஜே வி பி இந்த கூட்டமைப்புக்குள் இணைத்துக்கொள்ளப்படமாட்டாது என அவர் தெரிவித்துள்ளார். இதே மங்கள சமரவீர 2000 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் ஜனாதிபதி சந்திரிகாவுடன் ஜே.வி.பி கூட்டு சேர்வதற்கு முன்னிலை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.