கிராமங்களை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தித் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக ஆராயும் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பேதே அவர் இவ்வாறு கூறினார். முதலமைச்சர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
எமது மாகாணம் பல காலமாக யுத்தத்தின் கோரப் பிடியிலிருந்த ஒரு மாகாணம் என்பதால், முழுமையான அபிவிருத்தியினை உடனடியாக எதிர்பார்க்க முடியாது. கட்டம் கட்டமாகவே அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
அபிவிருத்தி என்பது ஒரு போதும் எம்மைத் தேடி வராது. நாம் தான் அதனைத் தேடிப் போக வேண்டும். அப்போதுதான் நாம் எமது பிரதேசங்களை வெகு விரைவாக அபிவிருத்தி செய்ய முடியும் என முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.