கல்முனை மாநகர சபையில் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு, தற்போது அரசாங்கத் தரப்பிலுள்ள முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் அச்சுறுத்தல் விடுத்திருப்பதாக ஜனாதிபதியிடம் புகார் செய்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே மேற்படி புகார் செய்யப்பட்டுள்ளது.
மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஹென்றி மகேந்திரன் (telo) உட்பட தமது கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் இந்த அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பது குறித்து ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது தாங்கள் சுட்டிக் காட்டியதாகவும் நடவடிக்கை எடுப்பதற்கு விபரங்களைச் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி கேட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீகாந்தா தெரிவித்தார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுவதைத் தடுப்பதற்கான ஒரு அச்சுறுத்தல் முயற்சியாகவே இதனைக் கருத வேண்டியிருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார். (வீரகேசரிnet 9/12/2009 11:27:07 AM )