ஜெட் விமான ஊழியர்கள் கடந்த 4 நாட்களாக நடத்திவரும் வேலை நிறுத்தப்போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர இன்று பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. 9 மணி நேரம் நடந்த இந்த பேச்சு வார்த்தையில் சுமுகமான முடிவு எதுவும் எட்டப்படவில்லை. இருதரப்பு பேச்சுவார்த்தை நாளை மும்பையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 2 நாட்களில் சுமுகமான முடிவு எட்டப்படும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்தப் போராட்டத்தினால் இன்று 242 ஜெட் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.